News January 6, 2026

8 பேரை கடித்த வெறிநாய் மக்கள் பீதி

image

செங்கல்பட்டு, வெடால் கிராமத்தில் குடியிருப்பு பகுதிகளில் உலா வந்த வெறிநாய் ஒன்று தேவி(50) என்பவரின் காலை கடித்துவிட்டு தப்பியோடியது.இதைத் தொடர்ந்து ரத்தினம் (50), கண்ணப்பன்(55), முனியம்மாள் (60),சீதா 40) உள்ளிட்ட எட்டு பேரை அந்த வெறிநாய் கடித்துள்ளது கட்டி வைக்கப்பட்டிருந்த மூன்று பசு கன்றுகளையும் கடித்துள்ளது. காயமடைந்தோர் இடைக்கழிநாடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

Similar News

News February 13, 2026

ஸ்தம்பித்த மதுராந்தகம்!

image

மதுராந்தகத்தில் இயந்திர கோளாறு காரணமாக பழுதாகி நின்ற கல்குவாரி லாரியால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. ஜல்லி மற்றும் எம் ஸ்டாண்ட் கலந்த கலவையை ஏற்றுக்கொண்டு லாரி ஒன்று மதுராந்தகம் நோக்கி வந்தது. அப்போது சென்னை மார்க்கத்தில் உள்ள மதுராந்தகம் பயணியர் நிழற்குடை அருகே இயந்திர கோளாறு காரணமாக லாரி நடுவழியில் நிறுத்தப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் போக்குவரத்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

News February 13, 2026

செங்கல்பட்டு: கல்லூரி விடுதியில் சடலமாக தொங்கிய மாணவன்!

image

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ஆயிஷ் மிஸ்ரா (18), இவர் செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரியில் உள்ள தனியார் பல்கலைக்கழக விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு பி.டெக்., படித்து வந்தார். இந்நிலையில் அவர் கல்லூரி விடுதியில் தூக்கிட்டு சடலமாக கிடந்துள்ளார். தகவலறிந்த போலீசார் உடலை கைப்பற்றி கல்லூரி நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

News February 13, 2026

செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

செங்கல்பட்டு நேற்று (பிப்.12) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.13) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!