News January 5, 2026
BREAKING: அதிமுக கூட்டணியில் புதிய கட்சி இணைந்தது

தமிழகத்தில் தேர்தல் கூட்டணியை உறுதி செய்யும் வேலைகளில் அனைத்து கட்சிகளும் இறங்கியுள்ளன. அந்த வகையில், அதிமுக கூட்டணியில் மீண்டும் இடம்பெறுவதை அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி உறுதி செய்துள்ளது. 2026 தேர்தலை அதிமுக தலைமையில் எதிர்கொள்ள இருப்பதாக அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கதிரவன் அறிவித்துள்ளார். ஏற்கெனவே <<18770843>>புரட்சி பாரதம்<<>> கட்சியும் அதிமுகவுடன் கூட்டணி எனத் தெரிவித்துள்ளது.
Similar News
News February 4, 2026
இந்த செய்தி உங்கள் உயிரை காக்கும்.. MUST READ

மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2025-ல் சுமார் 3 லட்சம் பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் கூறுகின்றன. இந்த நோய்க்கான அறிகுறிகள் பற்றி சரியான விழிப்புணர்வு இல்லாததாலேயே இதனை முன்பே கண்டறிய நாம் தவறுகிறோம். மார்பக புற்றுநோய் குறித்த தவறான புரிதல்களும் அதன் உண்மைகளையும் தெரிந்துகொள்ள மேலே உள்ள போட்டோக்களை SWIPE பண்ணுங்க. SHARE பண்ணுங்க.
News February 4, 2026
விஜய்க்கு இது கூட தெரியவில்லை: EPS

விஜய் மக்களை சந்திப்பதில்லை, தொலைக்காட்சியை பார்த்தும் நாட்டு நடப்பை தெரிந்துகொள்ளவில்லை என EPS விமர்சித்துள்ளார். TN-ல் NDA கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை என அமித்ஷாவே கூறிவிட்டதாக சொன்ன அவர், இதுகூட தெரியாதவராக விஜய் இருக்கிறார் என்றார். மேலும், கரூரில் 41 பேர் உயிரிழந்த பிறகு 72 நாள்கள் வீட்டைவிட்டு வெளியே வராதவர்தான் விஜய் எனவும் சாடியுள்ளார்.
News February 4, 2026
தங்கம் விலை.. அதிர்ச்சி தகவல்

தங்கம் விலை இன்று சவரனுக்கு ₹5,040 உயர்ந்து ₹1,19,200-க்கு விற்பனையாகிறது. குறிப்பாக, இரண்டு நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹7,600 அதிகரித்துள்ளது. இந்நிலையில், மீண்டும் சர்வதேச சந்தையில் தங்கம் விலை 1 அவுன்ஸ் $166.46 (இந்திய மதிப்பில் ₹15,056) உயர்ந்து $5,075.83-க்கு விற்பனையாகிறது. இதனால் வரும் நாள்களில் இந்திய சந்தையிலும் தங்கம் விலை உயரும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.


