News January 5, 2026
சொத்தை விற்று படிக்க வைக்கும் தமிழ்நாடு: கார்த்தி

கல்வியை கெட்டியாக பிடித்துக்கொண்டால் வாழ்க்கையும் சமூகமும் மாறும் என நடிகர் கார்த்தி கூறியுள்ளார். லேப்டாப் வழங்கும் திட்டத்தின் விழாவில் பேசிய அவர், பிள்ளைகள் நன்றாக படிக்கிறார்கள் என்று தெரிந்தால் சொத்தை விற்றாவது படிக்க வைக்கும் சிறப்பு கொண்ட ஊர் நம்ம ஊர்(தமிழகம்) என தெரிவித்தார். AI வளர்ந்து வரும் காலக்கட்டத்தில், மாணவர்களுக்கு அரசு லேப்டாப் வழங்குவது பாராட்டுக்குரியது என்றும் பேசியுள்ளார்.
Similar News
News February 4, 2026
BREAKING: தங்கம் விலை தடாலடியாக மாறியது

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை சமீபத்தில் வரலாறு காணாத புதிய உச்சமாக 1 அவுன்ஸ்(28g) $5,500-ஐ கடந்திருந்தது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் $190 (இந்திய மதிப்பில் ₹17,180) உயர்ந்து $4,990-க்கு விற்பனையாகிறது. இதனால், இன்றைய தினம் இந்திய சந்தையிலும் தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News February 4, 2026
H.ராஜா உடல்நிலை.. முக்கிய அப்டேட்

பக்கவாத பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் H.ராஜாவை நேரில் சந்தித்த நயினார் நாகேந்திரன், அவரது உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார். நல்ல முறையில் H.ராஜாவின் உடல்நலன் முன்னேறிக் கொண்டிருப்பதாக தெரிவித்த நயினார், வெகுவிரைவில் அவர் வீடு திரும்புவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், அவர் மக்கள் பணிக்கு திரும்புவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை எனவும் கூறியுள்ளார்.
News February 4, 2026
விஜய்யிடம் இன்ஜினே இல்லை: அண்ணாமலை

NDA கூட்டணியை பற்றி விமர்சிக்கும் விஜய்யால், முதலில் 234 தொகுதிகளில் வேட்பாளர்களை நியமிக்க முடியுமா என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். தங்களிடம் டபுள் இன்ஜின் இருப்பதாக குறிப்பிட்ட அண்ணாமலை, விஜய்யிடம் இதுவரை இன்ஜினே பார்க்க முடியவில்லை எனக் கூறினார். மேலும், தன்னிடம் வண்டி, இன்ஜின், சேஸ், ஊற்றுவதற்கு பெட்ரோல், டீசல் என எதுவுமே இல்லாமல் விஜய் பேசி வருவதாக அவர் விமர்சித்துள்ளார்.


