News January 5, 2026

TV சேனல்களுக்கு வந்த சத்திய சோதனை!

image

நாட்டில் டிஜிட்டல் பயன்பாடு அதிகரித்து வருவதால், டிவி சேனல்கள் பரிதாபத்திற்குரிய நிலைக்குச் சென்றுள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் நாடு முழுவதும் 50 டிவி சேனல்கள் தங்கள் உரிமத்தை திருப்பி தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் NDTV, ஜீ, ஜியோ ஸ்டார் உள்ளிட்ட முன்னனி நிறுவனங்களும் அடங்கும். விளம்பர வருவாய் குறைந்ததும், மொபைல் பயன்பாடு அதிகரித்ததும் இதற்கு ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

Similar News

News February 15, 2026

வெள்ளி விலை குறைந்தது.. வியாபாரிகள் சொல்வது என்ன?

image

தொடர் விலை சரிவால் வெள்ளியில் முதலீடு செய்யலாமா, வேண்டாமா என பலரும் குழப்பத்தில் உள்ளனர். இது குறித்து பிரபல நகைக்கடை உரிமையாளரிடம் பேசினோம். அப்போது, 2 வாரங்களில் வெள்ளி விலை கிலோவுக்கு ₹1,45,000 சரிந்து தலைகீழாக மாறியுள்ளது. அதனால், வெள்ளி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. முதலீடு நோக்கத்தில் பெரிய அளவில் வெள்ளியை வாங்குவது சரியானதாக இருக்காது என்றார். அதனால், சிந்தித்து செயல்படுங்கள்.

News February 15, 2026

எத்தனை பேருக்கு இந்த கார்ட் ஞாபகம் இருக்கு?

image

இன்று 1.5GB தினசரி டேட்டாவில் போனிலேயே மூழ்கி இருக்கும் Gen Z ஜெனரேஷனுக்கு இதன் அருமை தெரியாது. ஒரே ஒரு போட்டோ டவுன்லோடாக 1 மணி நேரம் எடுத்த காலம் அது. ஆனாலும் அந்த காத்திருப்பில் ஒரு சுகம் இருந்தது. எவ்வளவு நெட் போடணும், என்ன பாக்கணும் என்பது அன்று நமது கன்ட்ரோலில் இருந்தது. ஆனால், இன்று அதீத நெட் வசதியால், போன்தான் நம்மை கட்டுப்படுத்துகிறது. உங்களில் எத்தனை பேர் இதை யூஸ் பண்ணியிருக்கீங்க?

News February 15, 2026

தேமுதிகவிடம் கறார் காட்டும் திமுக, அதிமுக!

image

தேமுதிக 2 இலக்கத்தில் சீட் கேட்பதால் மாறி மாறி பேரம் பேசி திமுகவும், அதிமுகவும் டயர்ட் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இனி ஒற்றை இலக்கம்தான் கொடுப்போம், ஏத்துக்கிட்டா கூட்டணிக்கு வாங்க என தேமுதிகவிடம் இருதரப்பும் கறார் காட்டியிருக்கிறதாம். இந்நிலையில், இதனை ஏற்று பிரதான கட்சிகளான அதிமுக, திமுக இரண்டில் ஒன்றை பிரேமலதா தேர்வு செய்வாரா (அ) தவெக பக்கம் சாய்வாரா என கேள்வி எழுந்துள்ளது.

error: Content is protected !!