News January 5, 2026
‘பராசக்தி’ ஹீரோவை அணுகிய ‘பார்க்கிங்’ இயக்குநர்

‘பார்க்கிங்’ பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன், SK-ஐ அணுகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக சிம்புவுக்கும், ரஜினிக்கும் ராம்குமார் கதை கூறியிருந்தார். ஆனால், சிம்புவுக்கான கதை படமாவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், ரஜினிக்கு கதையில் திருப்தி இல்லை என கூறப்படுகிறது. இதனால் அந்த கதைகள் SK-க்கு சென்றுள்ளன. இதில் அவர் எதை தேர்ந்தெடுப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Similar News
News January 16, 2026
அரவக்குறிச்சியில் பயங்கர விபத்து இளைஞர் பலி!

கரூர் அரவக்குறிச்சி – ஆண்டிபட்டி சாலையில் பூபதி ஓட்டிய சொகுசு பேருந்து திடீரென பிரேக் பிடித்தது. அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மோகன் பிரசாத் (25), பேருந்தின் பின்புறம் பலமாக மோதி தலையில் காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News January 16, 2026
திமுக கூட்டணியில் இருந்து காங்., வெளியேறும்: EPS

‘ஆட்சியில் பங்கு’ என்ற முழக்கம் மூலம் திமுகவுக்கு காங்., கட்சியினர் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இதுதொடர்பான கேள்விக்கு, திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்., கை நழுவி வெளியே போகப் போகிறது என்றும், இதனால், இண்டியா கூட்டணி நிலைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் EPS கூறியுள்ளார். மேலும், திமுகவை எப்பொழுது ஆட்சியில் இருந்து அகற்றுவோம் என மக்கள் எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
News January 16, 2026
BREAKING: இன்று கிடையாது.. தமிழக அரசு அறிவித்தது

திருவள்ளுவர் தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் இன்று(ஜன.16) டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம், அனைத்து மதுபானக் கடைகளில் சில்லறை விற்பனை, அதனுடன் இணைந்த பார்களில் விற்பனை நடைபெறாது. அதனை மீறி விற்பனை நடந்தாலோ, கள்ளச் சந்தையில் விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.


