News January 5, 2026
மாணவர்களுக்கு CM ஸ்டாலின் கொடுத்த அட்வைஸ்

இன்றைய தினம் கல்லூரி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான நாள். அரசின் விலையில்லா லேப்டாப் திட்டத்தை தொடங்கிவைத்த CM ஸ்டாலின், லேப்டாப்பை கேம்ஸ் விளையாட, படம் பார்க்க பயன்படுத்தாமல் கரியருக்கான Launch Pad-ஆக பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அரசு தரும் லேப்டாப் ஒன்றும் பரிசுப்பொருள் அல்ல, உலகை ஆள்வதற்கு தரப்பட்ட கருவி எனத் தெரிவித்த அவர், மனிதனை AI ரீபிளேஸ் செய்யாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News February 2, 2026
பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய டெல்லி அணி

WPL 2026 தொடரின் லீக் சுற்றின் கடைசிப் போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணி யுபி வாரியர்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த யுபி, 122/8 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய டெல்லி, 18.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டி, பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. எலிமினேட்டர் போட்டியில் டெல்லி, குஜராத் அணியை எதிர்கொள்ளும். இதில் வெற்றி பெறும் அணி பைனலில் ஆர்சிபியை எதிர்கொள்ளும்.
News February 2, 2026
ராசி பலன்கள் (02.02.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News February 2, 2026
40 மணி நேரம் மோதல்.. 193 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் BLA அமைப்பினருக்கும் ராணுவத்திற்கும் இடையே 40 மணி நேரமாக நடந்த சண்டையில் 193 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 145 பேர் தீவிரவாதிகள், 17 போலீசார் மற்றும் 31 பொதுமக்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். குவெட்டா உள்பட 12 பகுதிகளில் மோதல்கள் நடைபெற்றன. பாகிஸ்தானின் நிலப்பரப்பில் 42%-ஐ கொண்டுள்ள பலுசிஸ்தான் பல ஆண்டுகளாக சுதந்திரத்திற்காக போராடி வருகிறது.


