News January 5, 2026
NDA கூட்டணியில் விஜய்யை கொண்டு வர அமித்ஷா வியூகம்

DMK-விற்கு எதிரான வாக்குகளை ஒருங்கிணைக்க, அனைத்து எதிர்க்கட்சிகளையும் NDA கூட்டணிக்குள் கொண்டு வர தமிழக BJP-க்கு <<18769878>>அமித்ஷா<<>> உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால், விஜய் உடனான கூட்டணி பேச்சுவார்த்தையை BJP தீவிரப்படுத்த உள்ளதாம். மதச்சார்பின்மை அடிப்படையில் தவெகவும், காங்கிரஸும் கூட்டாளிகள் என ஃபெலிக்ஸ் ஜெரால்டு கடந்த வாரம் கூறியிருந்த நிலையில், தற்போது BJP-ம் காய் நகர்த்த உள்ளது.
Similar News
News February 4, 2026
BREAKING: தங்கம் வாங்குவோருக்கு அதிர்ச்சி

கடந்த சில தினங்களாக தங்கம் விலை 15% வரை சரிந்ததால் பலரும் காயின்கள், பிஸ்கட்டுகளாக வாங்கி குவித்தனர். தற்போது விலை ஏற்றத்தில் இருப்பதால் சிலர் வங்கிகளில் நகைக் கடனாக பெற முயல்கின்றனர். ஆனால், RBI ரூல்ஸ் படி காயின்களுக்கு வங்கிகள் நகைக் கடன் வழங்குவதில்லை. இதனால் பலரும் ஏமாற்றத்துடன் வீடு திரும்புகின்றனர். எனவே முதலீடு, வங்கிக் கடன் நோக்கில் தங்கம் வாங்குவோர் நகைகளாக வாங்குவதே சிறந்தது.
News February 4, 2026
இந்தியாவின் மிகவும் விலையுயர்ந்த டாப் 10 வீடுகள்!

இந்தியாவின் பல முன்னணி தொழிலதிபர்கள் மிகப்பெரும் செலவில் அழகான, பிரமாண்டமான வீடுகளை கட்டியுள்ளனர். அவர்களில் யாரெல்லாம் மிகவும் விலையுயர்ந்த வீடுகளை வைத்துள்ளனர்? அந்த வீடுகள் எங்கு அமைந்துள்ளன? அவற்றின் மதிப்பு எவ்வளவு? இந்த தகவல்களை எல்லாம் மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொரு படமாக ஸ்வைப் செய்து பார்த்து விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். SHARE
News February 4, 2026
இந்திய சந்தையை US-க்கு வாடகைக்கு விட்டதா? சு.வெ.,

இந்திய-US வர்த்தக ஒப்பந்தத்தில் PM மோடி சரணாகதி அடைந்தார் என்பதை US செய்தி தொடர்பாளர் உறுதி செய்துள்ளதாக MP சு.வெங்கடேசன் சாடியுள்ளார். ஒப்பந்தம் இறுதி கட்டத்தில் இருப்பதாக பியூஷ் கோயல் கூறும் நிலையில், அதற்கு மாறாக இந்தியா ஒப்புக்கொண்ட முடிவுகளை US அதிகாரி பட்டியலிடுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இந்தியாவின் நிர்வாகத்தை US-க்கு உள் வாடகைக்கு விட்டதா BJP எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.


