News January 5, 2026
முகமது ஷமிக்கு ECI சம்மன்

மேற்கு வங்கத்தில் SIR நடைமுறையின் ஒரு பகுதியாக, முகமது ஷமி மற்றும் அவரது சகோதரர் முகமது கைஃப் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இவர்களது கணக்கெடுப்பு படிவங்களில் உள்ள சிக்கல்கள் காரணமாக, வரும் 9 மற்றும் 11-ம் தேதிகளில் உதவி தேர்தல் பதிவு அதிகாரி முன் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. உ.பி.,யில் பிறந்த ஷமி, பல ஆண்டுகளாக கொல்கத்தாவில் நிரந்தரமாக வசித்து வருவதுடன், அங்கு வாக்காளராகவும் உள்ளார்.
Similar News
News February 7, 2026
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 52 லட்சம் மதிப்பீட்டில் புதிய தேர்

நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் இந்து அறநிலையத்துறை சார்பில் ரூ.52 லட்சம் மதிப்பீட்டில் புதிய தேர் அமைக்கும் பணிகள் சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது . பணிகள் 6 மாதங்களில் நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் துணை மேயர் பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனால் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
News February 7, 2026
மருமகளுக்கு எதிராக மகளை களமிறக்குகிறாரா ராமதாஸ்?

தர்மபுரி பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் மனைவி செளமியாவை களமிறக்க அன்புமணி திட்டமிட்டுள்ளாராம். இதனால், அதே தொகுதியில் மகள் காந்திமதியை இறக்க ராமதாஸ் காய் நகர்த்தி வருகிறாராம். இதனால் மருமகள் vs மகள் போட்டி அனல் பறக்கும் என தைலாபுர வட்டாரங்கள் கூறுகின்றன. அதிமுக கூட்டணியில் அன்புமணி இணைந்துவிட்ட நிலையில், ராமதாஸ் இதுவரை கூட்டணியை உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
News February 7, 2026
FLASH: தங்கம் விலை மீண்டும் குறைகிறது

சர்வதேச சந்தையில் <<19072118>>காலையில் ஏறுமுகத்தில்<<>> இருந்த தங்கம் தற்போது இறங்குமுகத்தில் உள்ளது. அதன்படி காலையில் $4,966-க்கு விற்பனையான 1 அவுன்ஸ்(28g) தற்போது $79 குறைந்து $4,887 ஆக உள்ளது. இதே நிலை நீடித்தால், நம்மூர் சந்தையில் <<19073108>>காலையில் உயர்ந்த<<>> விலையில் மாலை நேர வர்த்தகத்தில் சற்று குறைய வாய்ப்புள்ளது. நாளை தங்கம் மார்க்கெட் விடுமுறை என்பதால் இதே நிலை நீடிக்கவும் வாய்ப்புள்ளது.


