News May 3, 2024
தி.மலையில் 105 டிகிரி!

திருவண்ணாமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், அதிகபட்சமாக 105 டிகிரி வெயில் பதிவானது. சாலைகளில் அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகள், வாகனங்களை சரிவர இயக்க முடியாமல் அவதிப்பட்டனா். உணவகங்கள், வணிக நிறுவனங்களில் வியாபாரம் குறைந்து காணப்பட்டது.
Similar News
News August 26, 2025
தி.மலை: மீண்டும் ஒரு திருப்பூர் ரிதன்யா சம்பவம்

தி.மலை அடுத்த வட ஆண்டாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அருண். இவரது மனைவி மகாலட்சுமி. அருண் ஜெர்மனியில் வேலை பார்த்து வரும் நிலையில், மகா லட்சுமியிடம் மாமியார் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததால் மகாலட்சுமி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில், இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News August 26, 2025
தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கை ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா்கள் சங்கம் சாா்பில், திருவண்ணாமலை மாநகரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் வட்டார அளவில் சங்கத்தின் மாவட்ட பொருளாளா் எஸ்.மூா்த்தி தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளா்கள் நேற்று மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.சிறப்பு அழைப்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளா் கே.ராணி கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா்.
News August 26, 2025
அண்ணாமலையார் கோவிலில் திரைப்பட நடிகை தரிசனம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நேற்று (ஆக.25) தமிழ் திரைப்பட நடிகையான சஞ்சிதா ஷெட்டி சுவாமி தரிசனம் செய்தார். இவர் சமீபத்தில் வெளிவந்த சூது கவ்வும் படத்தில் நடித்துள்ளார். இவர் தரிசனம் முடித்துவிட்டு வந்த பின் இவருடன் பக்தர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மேலும் பாடகி சிறுமி தியா தனது இனிமை குரலால் நடிகைக்கு முருகன் பாடலை பாடி ஆச்சர்ய படுத்தினார்.