News May 3, 2024
9 மாவட்டங்களில் கொட்ட போகுது மழை

அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, நீலகிரி மாவட்டங்களில் இன்னும் 3 மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது. சில இடங்களில் தண்ணீர் தேங்க வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
Similar News
News February 8, 2026
TNPSC குரூப் 2 தேர்வு ரத்தானதால் அதிரடி மாற்றம்

குரூப்-2, 2ஏ <<19082017>>தேர்வுகள் <<>>கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதன் எதிரொலியாக அரசு அதிரடி மாற்றம் செய்துள்ளது. தேர்வு மையங்களில் குளறுபடி ஏற்பட்டதால் சென்னை உள்பட பல இடங்களில் தேர்வர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், TNPSC தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த சண்முகசுந்தரம் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதில் புதிய அலுவலராக வெங்கட பிரியாவை அரசு நியமித்துள்ளது.
News February 8, 2026
அஜித்துடன் கைகோர்க்கும் விஜய் பட தயாரிப்பாளர்?

தென்னிந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான தில் ராஜு, அஜித்தை வைத்து ரீமேக் படம் ஒன்றை எடுக்க முடிவு செய்துள்ளாராம். மலையாள திரைப்படமான ‘மார்கோ’ ரீமேக்கிற்காக அஜித்தை அணுகிய ராஜு, அவருடைய பதிலுக்காக காத்திருப்பதாக கூறப்படுகிறது. ஒருபக்கம் கார் ரேஸிங்கில் பிஸியாக இருக்கும் அஜித், அடுத்து AK64-ல் நடிக்க இருக்கிறார். இதனால், தில் ராஜுவின் ரீமேக் பிளானில் இணைவாரா என்பது சந்தேகம்தான்.
News February 8, 2026
362 பாகிஸ்தான் வீரர்களை காலி செய்த BLA

கடந்த ஒரு வாரத்தில் பாகிஸ்தான் அரசுக்கு பலுசிஸ்தான் விடுதலைப் படை (BLA) பெரும் தலைவலியை கொடுத்துள்ளது. 14 நகரங்களில் 76 தாக்குதலை நடத்தியதாக கூறும் BLA, 364 ராணுவ வீரர்களை கொன்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. தங்கள் தரப்பில் 93 பேர் உயிரிழந்திருப்பதாகவும், அதிலும் தற்கொலைப்படை தாக்குதலில் மட்டும் 50 பேர் உயிரை பறிகொடுத்ததாகவும் கூறியுள்ளது. இதனால் பாகிஸ்தான் ராணுவமும், அரசும் நிலைகுலைந்து நிற்கின்றன.


