News January 5, 2026
கடலூர்: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு – Apply பண்ணுங்க!

கடலூர் மக்களே.. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.!
Similar News
News January 15, 2026
ஏல சீட்டு நடத்தி மோசடி செய்த ஒருவர் கைது

பெரியகுமட்டியை சேர்ந்த அசோகன் மற்றும் அவரது மனைவி கலைச்செல்வி ஆகியோர் ஏல சீட்டு நடத்துவதாக கூறி கடலூர் பகுதி சேர்ந்த பலரிடம் சீட்டு பிடித்து சீட்டு முடிந்த பிறகும் பணம் கொடுக்காமல் ஏமாற்றி உள்ளனர். கிருபாகரன், சிவராமகிருஷ்ணன், திருஞான செல்வம், செல்வராஜ் ஆகியோர் கடலூர் குற்றப்பிரிவு போலீசாரிடம் அளித்த புகாரில் ரூ.13,98,912 ஏல சீட்டு பணத்தை ஏமாற்றிய அசோகன் (43) என்பவரை இன்று கைது செய்தனர்.
News January 15, 2026
கடலூர்: சாதிச்சான்றிதழ் வழங்க சிறப்பு முகாம்

கடலூர் மாவட்டத்தில் புதிரை வண்ணார் சமூகத்தினருக்கு சாதிச்சான்றிதழ், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை வழங்குவதற்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் விருத்தாசலம், வேப்பூர், திட்டக்குடி, பண்ருட்டி, ஸ்ரீமுஷ்ணம், சிதம்பரம், குறிஞ்சிப்பாடி ஆகிய வட்டாட்சியர் அலுவலகத்தில் வருகிற ஜன. 20 முதல் 23 வரை நடைபெறும்.
News January 15, 2026
கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று(ஜன.14) இரவு 10 மணி முதல் இன்று(ஜன.15) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


