News January 5, 2026

வங்கி கணக்கில் ₹10,000.. தமிழக அரசு புதிய அறிவிப்பு

image

CM திறனாய்வு தேர்வுக்கு 10-ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கும் அவகாசத்தை TN அரசு நீட்டித்துள்ளது. புதிய அறிவிப்பின்படி, நாளை(ஜன.6) வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜன.31-ல் தேர்வு நடைபெற உள்ள நிலையில், இதில் தேர்வாகும் 1,000 மாணவர்களுக்கு கல்வியாண்டுக்கு தலா ₹10,000 உதவித்தொகை வழங்கப்படும்.<> www.dge.tn.gov.in<<>> தளத்தில் டவுன்லோடு செய்யப்படும் விண்ணப்பத்தை நிரப்பி HM வசம் ஒப்படைக்க வேண்டும். SHARE

Similar News

News February 8, 2026

செல்போனில் ஆபாச வீடியோ தேடியவருக்கு ஷாக்!

image

சீனாவில் ஒருவர் இணையத்தில் ஆபாச வீடியோ தேடும்போது அவர் தனது காதலியுடன் இருந்த அந்தரங்க வீடியோ Live Stream ஆனது அதிர்ச்சியை கொடுத்துள்ளது. விசாரணையில், ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தபோது ஸ்விட்ச் போர்டில் மறைத்து வைக்கப்பட்ட ஸ்பை கேமரா மூலம் வீடியோ எடுக்கப்பட்டது அம்பலமாகியுள்ளது. போலீஸில் புகார் அளித்த பிறகு பெரிய மாஃபியா கும்பல் சிக்கியுள்ளது. ஹோட்டலில் தங்கும் போது தம்பதியினர் உஷார்.

News February 8, 2026

ரயில்வேக்கு PM மோடி அட்வைஸ் கொடுக்கனும்: CM

image

தமிழகத்திற்கான ரயில்வே திட்டங்களுக்கு முழு நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என PM மோடியை CM ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக எழுதிய கடிதத்தில், நில எடுப்பு, இழப்பீடு வழங்குவதை விரைவுபடுத்திட ஏதுவாக தாமதமின்றி நிதியை விடுவிக்க CM கோரியுள்ளார். மேலும் தமிழகத்திற்கு கூடுதலாக புதிய திட்டங்களை வழங்கிட இந்திய ரயில்வேக்கு அறிவுரைகளை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

News February 8, 2026

மனதை லேசாக்கும் ஃபீல் குட் படங்கள்.. மிஸ் பண்ணிடாதீங்க!

image

மனசு பாரமா இருக்கும் போது, கொஞ்சம் லேசாக்க ஃபீல் குட் படங்களை பார்த்து ரசிக்கலாம். அப்படி OTT-ல் பார்க்கக்கூடிய காலம் கடந்தும் பேசப்படும் சில ஃபீல் குட் படங்களை பட்டியலிட்டுள்ளோம். மேலே உள்ள போட்டோவை இடது பக்கம் Swipe செய்து அந்த படங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இந்த லிஸ்ட்டில் இன்னும் வேறு எந்த படங்களை சேர்க்கலாம்.. கமெண்ட் பண்ணுங்க.

error: Content is protected !!