News May 3, 2024
மயிலாடுதுறை ரயில் நிலையத்திற்கு புதிய வரவு

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நீண்ட நாள் கோரிக்கையான பேட்டரி கார் சேவை தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. தொடர்ந்து ஒரு நபருக்கு 30 ரூபாய் கட்டணமாக வசூல் செய்யப்படும் நிலையில் 9994165945 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு ரயில் பயணிகள் பயன்படுத்தலாம் என ரயில்வே நிர்வாகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 26, 2025
மயிலாடுதுறை: அரசு பேருந்து குறித்து புகார் அளிக்க எண்

மயிலாடுதுறை மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் குறித்து, உங்களது புகார் அல்லது குறைகளை தெரிவிக்க ‘1800 599 1500’ என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இதன் மூலம் பேருந்து கால தாமதமாக வருவது, நிற்காமல் செல்வது, ஓட்டுநர் அல்லது நடத்துநர் பயணிகளிடம் தரக்குறைவாக நடந்து கொள்வது குறித்து உங்களால் வீட்டிலிருந்த படியே புகார் தெரிவிக்க முடியும். இந்த தகவலை SHARE செய்து அனைவருக்கும் தெரியப்படுத்துங்க
News August 26, 2025
மயிலாடுதுறை வரலாறை தெரிந்துகொள்ளுங்கள்!

மயிலாடுதுறை சோழர்கள் தொடங்கி மராட்டியர்கள், பிரிட்டிஷ் பேரரசு உள்ளிட்ட பல்வேறு வம்சங்களால் ஆளப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடையும் வரை முந்தைய தஞ்சை மாவட்டத்தின் பகுதியாகவும், 1991 வரை தஞ்சாவூர் மாவட்டமாகவும், 2020 வரை புதிதாக உருவாக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்டத்தின் ஒரு பகுதியாகவும் இருந்தது. இந்நிலையில் டிசம்பர் 28, 2020 அன்று தமிழ்நாட்டின் 38வது மாவட்டமாக மயிலாடுதுறை தொடங்கியது. ஷேர் பண்ணுங்க
News August 26, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணி மேற்கொள்ள உள்ள போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ளது. இதில் மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு, செம்பனார்கோயில், பொறையார், சீர்காழி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரோந்து செல்லும் போலீசாரின் தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு பொதுமக்கள் குற்ற நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்.