News January 5, 2026

புதுகை: சிலிண்டர் மானியம் வருதா? CHECK IT

image

கூகுளில்<> mylpg <<>>என்று இணையத்தளத்தில் சென்றால், 3 கியாஸ் சிலிண்டர்களின் படங்கள் இருக்கும். அதில் நீங்கள் வாங்கும் சிலிண்டரை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து உங்கள் மொபைல் எண்ணை போட்டால், OTP வரும். அந்த நம்பரையும் போட வேண்டும். பின்னர், View Cylinder Booking History அல்லது Subsidy transferred என்ற விருப்பத்தை கிளிக் செய்தால் நீங்கள் மானியம் தொடர்பான விவரங்களை பார்க்கலாம். ஷேர் செய்யுங்கள்.

Similar News

News January 16, 2026

புதுகை: பைக்கிலிருந்து தவறி விழுந்த இளைஞர் உயிரிழப்பு

image

திருமயம் அருகே உள்ள நமணசமுத்திரத்திலிருந்து நச்சாந்துபட்டிக்கு பைக்கில் ஆனந்தகுமார் (23), பிரசாத் (22) ஆகிய இருவரும் சென்றுள்ளனர். அப்போது பேரையூர் சாலையில் பைக்கிலிருந்து தவறி கீழே விழுந்ததில் ஆனந்தகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பிரசாத் படுகாயமடைந்து மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து நமணசமுத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 16, 2026

புதுகை: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

image

புதுகை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <>parivahansewas.com<<>> என்ற இணையதளம் சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். (SHARE பண்ணுங்க).

News January 16, 2026

புதுகை: விபரீதத்தில் முடிந்த கணவன்-மனைவி பிரச்சனை

image

புதுக்கோட்டை, திருகோகர்ணம் அடுத்த பாலர் நகரைச் சேர்ந்தவர் கணேசன் (45). இவர் கடந்த ஜனவரி 13-ம் தேதி அன்று அவரது மனைவி தனலட்சுமி உடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பாலன் நகரில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவரது தாய் செல்லம்மாள் நேற்று திருக்கோகர்ணம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!