News January 5, 2026
விருதுநகர்: ஒரு மெசேஜ் போதும், உடனடி தீர்வு !

உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் குறித்து மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக புகார் அளிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், திருச்சி மாவட்ட மக்கள் ‘94861-11912’ என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இத்தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
Similar News
News January 15, 2026
சிவகாசி அருகே கிணற்றில் தவறி விழுந்து ஒருவர் பலி

ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள எலுமிச்சங்காய்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சேதுராமலிங்கம் (85). இவர் தனது தோட்டத்தில் உள்ள கிணற்றின் அருகே பொங்கல் பண்டிகைக்கு காப்பு கட்டும் செடிகளை பிடுங்க முயன்ற போது எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்தார். இதகவ்ல் அறிந்து சென்ற ஏழாயிரம்பண்ணை தீயணைப்புத் துறையினர் முதியவரின் சடலத்தை மீட்டனர்.
News January 15, 2026
விருதுநகர்: அரசுப் பேருந்து மோதியதில் ஒருவர் பலி

காரியாபட்டி அருகே செவல்பட்டி பகுதியில் முன்னால் சென்ற பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற குராயூர் அருகே உள்ள மாசவணத்தம் கிராமத்தைச் சேர்ந்த சின்னாண்டி(46) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காரியாபட்டி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 15, 2026
ஸ்ரீவி: கனவில் கேட்டதால் 45 பவுன் நகையை வழங்கிய பெண்

சிவகாசியை சேர்ந்த ஜோதிலட்சுமியின் கனவில் கடந்த வாரம் ஸ்ரீவி ஆண்டாள் தோன்றி உன் நகைகளை எனக்குத் தா, என கேட்டதால் பச்சைக்கல் பதித்த 2 தங்க மாலைகள்,ஒரு சங்கு பதக்க மாலை உட்பட 45 பவுன் தங்க நகைகளை ஆண்டாளுக்கு அப்பெண் சமர்ப்பித்தார். நேற்று அப்பெண் கொடுத்த தங்க நகைகள் சாற்றப்பட்டு தங்க பல்லக்கில் தங்க கவசம் அணிந்து ஆண்டாள் எண்ணெய் காப்பு உற்ஸவத்திற்கு புறப்பாட்டார்.


