News January 5, 2026
புதுவை: ஒப்பந்த பயிற்சியாளர் பணிக்கு அழைப்பு

புதுவை மாநிலத்தில் கேலோ இந்திய மையம் நிறுவப்பட உள்ளது. இதில் புதுவை (கால்பந்து), காரைக்கால் (பேட்மிட்டன்), மாகே (கைப்பந்து), ஏனாம் (தடகளம்) என 4 மையங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் 11 மாதத்துக்கு பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். director-sports@py.gov.in என்ற மின்னஞ்சலுக்கு விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டும் என புதுவை விளையாட்டு இளைஞர் நலத்துறை இயக்குநர் சுதாகர் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 17, 2026
புதுச்சேரி: 199 இறைச்சிக் கடைகளுக்கு அபராதம்!

புதுச்சேரி உழவர்கரை நகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் திருவள்ளுவர் தினத்தை ஒட்டி இறைச்சி மற்றும் இதர மீன், மாமிச விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று அதிகாரிகள் சோதனை செய்த போது அதில், தடையை மீறி செயல்பட்ட 199 கடைகளுக்கு மொத்தம் 62,450 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அதிகபட்சமாக இந்திரா நகர் தொகுதியில் 33 கடைகளுக்கு 16,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
News January 17, 2026
புதுவை: மன உளைச்சலால் வழக்கறிஞர் தற்கொலை

பாகூர், குருவிநத்தம் இளையபெருமாள் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளாக நீரிழிவு, ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும் இருதய அறுவை சிகிச்சையும் செய்துள்ளார். அதன்பின், வழக்கம் போல் கோர்ட்டிற்கு சென்று வந்த அவர், கடந்த 6 மாதங்களாக மன உளைச்சலுக்கு ஆளாகி ஜிப்மரில் சிகிச்சை பெற்றுள்ளார். இந்நிலையில் நேற்று அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என கூறப்படுகிறது.
News January 17, 2026
புதுவை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

புதுவை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


