News January 5, 2026

இது இனி உங்க தலையிலும் ஒட்டியிருக்கலாம்!

image

Zomato CEO தீபிந்தர், தலையில் ஒட்டிக் கொண்டிருக்கும் இந்த கருவியின் பெயர் ‘Temple’. டெஸ்டிங் ஸ்டேஜில் உள்ள இது, மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் சீராகவும், ஒரே வேகத்திலும் உள்ளதா என்பதை கண்காணிக்கிறதாம். மேலும், இதன் மூலம் நரம்பியல் ஆரோக்கியம், மூளையின் செயல்திறனை கவனிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது. மக்களின் பயன்பாட்டிற்கு வந்தால், இது வருங்காலத்தில் அனைவரின் தலையில் ஒட்டிக் கொண்டிருக்கலாம்.

Similar News

News January 24, 2026

தங்கம் விலை தடாலடியாக மாறியது

image

சர்வதேச சந்தையில் தங்கம் விலை இன்று அதிக அளவு உயர்ந்துள்ளது. 1 அவுன்ஸ்(28g) $78.97 உயர்ந்து $4,988.56-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலையும் 1 அவுன்ஸ் $7.17 உயர்ந்து $103.3 ஆக உள்ளது. இதனால், இந்திய சந்தையில் நேற்று மாலை குறைந்த தங்கம், வெள்ளி விலை இன்று (ஜன.24) உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News January 24, 2026

சகல செல்வங்களை அருளும் சனிக்கிழமை விரதம்!

image

பெருமாளுக்காக சனிக்கிழமையில் விரதம் இருக்கும் பக்தர்களுக்கு சனி பகவான் துன்பங்களை தருவதில்லை என்பது நம்பிக்கை. செல்வம், ஆரோக்கியம், ஆயுள் இவை மூன்றும் பரிபூரணமாக கிடைக்க சனிக்கிழமை விரதத்தை கடைபிடிக்கலாம். காலை குளித்துவிட்டு பூஜை செய்து மாலை வரை உணவு உண்ணாமல் பால், தண்ணீர் மட்டும் குடித்து விரதம் மேற்கொண்டால் நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

News January 24, 2026

கூட்டணியால் கூடுதல் பலம் கிடைக்கும்.. தமிழிசை

image

NDA கூட்டணி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் PM மோடி, EPS, TTV, அன்புமணி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து பேசிய தமிழிசை, காலை முதலே சூரியன் காணாமல் போய்விட்டது. எனவே, PM சொன்னதுபோல் 2026-ல் திமுக இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்று கூறினார். மேலும், NDA கூட்டணி ஏற்கெனவே பலமாக உள்ளது, இன்னும் யாராவது சேர்ந்தால் கூடுதல் பலம் கிடைக்கும் என்றார்.

error: Content is protected !!