News January 5, 2026
கவர்னர் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் காங்கிரஸ்

குடியரசு தின விழாவையொட்டி கவர்னர் ஆர்.என்.ரவி அனைத்து கட்சிகளுக்கும் தேநீர் விருந்து வைப்பது வழக்கம். இந்நிலையில், இந்த விருந்தை புறக்கணிப்பதாக TN காங்., அறிவித்துள்ளது. TN மக்களால் பெரும்பான்மையாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், TN மக்களுக்கும் தொடர்ந்து துரோகம் இழைத்து வரும் கவர்னர் ஆர்.என்.ரவி வழங்கும் தேநீர் விருந்தில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
Similar News
News February 16, 2026
மக்களை கவருமா இடைக்கால பட்ஜெட்?

2026-27-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நாளை தாக்கல் செய்ய உள்ளார். சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளதால், மக்களைக் கவரும் பல முக்கிய
அறிவிப்புகள் இதில் இடம்பெறுவதற்கு வாய்ப்புள்ளது. இடைக்கால நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்படும் திட்டங்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கும் வகையில் வரும் 23-ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
News February 16, 2026
மஞ்சளில் இவ்வளவு நன்மைகளா?

*மஞ்சள் ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினியாகும். *மஞ்சள் கிழங்குகள் கார்ப்பு, கசப்பு சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டவை.* கல்லீரலைப் பலப்படுத்தும். *பசியை அதிகமாக்கும். காய்ச்சலைத் தணிக்கும். *குடல் வாயுவை அகற்றும். தாதுக்களைப் பலப்படுத்தும். *வீக்கம், கட்டி ஆகியவற்றை கரைக்கும்.*மஞ்சள் கிழங்குகள், பளிச்சிடும் மஞ்சள் நிறமானவை. நறுமணமுள்ளவை. *உலர்ந்த கிழங்குகளே மருத்துவப் பயன் கொண்டவை.
News February 16, 2026
மாணிக்கம் தாகூர் கருத்து காங்., கருத்தல்ல: மனோ தங்கராஜ்

கூடுதல் தொகுதி, ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை காங்கிரஸ் MP <<19148133>>மாணிக்கம் தாகூர்<<>> தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதனால் திமுக , காங்., கூட்டணியில் தொடர்ந்து சலசலப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் 2 கட்சியிலும் கூட்டணி தொடர்பாக பேசக்கூடாது என்ற உத்தரவு உள்ளதாகவும், இதற்கிடையே தனிநபர் சொல்லும் கருத்தை கட்சியின் கருத்தாக எடுத்துக்கொள்ள வேண்டாம் எனவும் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.


