News January 5, 2026

நாகை: 10-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை!

image

திருமருகலை சேர்ந்தவர் கலியபெருமாள். இவரது மகள் சங்கவி (14). இவர் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இவருக்கு மயக்கம் ஏற்பட மருத்துவகல்லூரிக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், சங்கவி விஷம் குடித்து இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சங்கவி நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Similar News

News January 14, 2026

நாகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

நாகை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில், வரும் ஜன.20-ம் தேதி பொதுமக்களுக்கான குரல் ஒப்புவித்தல் போட்டி , குரல் சார்ந்த ஓவிய போட்டிகள் நடைபெற உள்ளன. குரல் ஒப்புவித்தல் போட்டியில், ஒப்புவித்த குறள்களின் எண்ணிக்கை அடிப்படையிலேயே வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் விவரங்களுக்கு தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் 8754828470 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News January 14, 2026

நாகை: 220 கிலோ கஞ்சா பறிமுதல்

image

நாகை மாவட்டம், வேட்டைக்காரன் இருப்பு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது அப்பகுதியில் 220 கிலோ கஞ்சா மூட்டைகளை கொண்டு சென்ற காரை மடக்கி பிடித்த போலீசார், ரூ.22 லட்சம் மதிப்புள்ள கஞ்சா மூட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 14, 2026

நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில், நேற்று(ஜன.13) இரவு 10 மணி முதல் இன்று(ஜன.14) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!