News January 5, 2026
கரூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

கரூர் மாவட்ட காவல்துறை சார்பில், அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுவது உயிரிழப்புக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. “அதிக வேகம் கடுமையான காயங்களையும் மரணத்தையும் ஏற்படுத்தும்” என காவல்துறை தெரிவித்துள்ளது. அவசரநிலைகளில் கரூர் மாவட்ட காவல்துறை உதவி எண் 9498100780, அவசர உதவி எண் 100, ஆம்புலன்ஸ் எண் 108 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
Similar News
News February 5, 2026
குளித்தலை அருகே அதிகாலையில் சோகம்: ஒருவர் பலி!

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் அஜித்குமார் (37). இவர் கிரேன் உதவியாளராக வேலை பார்த்து வந்தார். அதிகாலை குளித்தலை சுங்ககேட் சாலையில் பெட்ரோல் பங்க் அருகே வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளனர். அப்போது அஜித்குமார் முன் சக்கர டயரை சோதனை செய்தபோது ஓட்டுநர் கிரேனை இயக்கியதில் அஜித்குமார் தொடை மீது ஏறியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குளித்தலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை
News February 5, 2026
அறிவித்தார் கரூர் கலெக்டர்!

கரூர் மாவட்டத்தில், 10th தோல்வி பெற்றவர்கள் முதல் முதுகலை படித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிரம்ப பெற்றவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மாதந்தோறும் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை www.tnvelaivaaippu.gov.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து ஜனவரி முதல் மார்ச்- 2026க்குள் வேலைவாய்ப்பு மையத்தில் நேரில் அளிக்க வேண்டும் என கரூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News February 5, 2026
கரூர் மாவட்டத்தில் இரவு ரோந்து காவலர் விபரம்

கரூர் மாவட்டத்தில் (04.02.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


