News January 5, 2026
ராமநாதபுரம்: நாதக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு

இராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு அரசு பேருந்து என பெயர் இல்லாமல் இருந்ததை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பாக கடந்த மாதம் ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் இந்த போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் நரிப்பையூர் சிவா மற்றும் மேலும் ஐந்து பேர் மீது சாயல்குடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Similar News
News January 11, 2026
இராமநாதபுரம் மாவட்டத்திற்கு புயல் எச்சரிக்கை!

தென்மேற்கு வங்ககடல் காற்றழுத்த தாழ்வு நிலை கரையினை கடக்க உள்ளதால் கடல்சார் வாரிய துறைமுக அலுவலகத்தில் திடீர் காற்றுடன் மழை பெய்வதை குறிக்கும் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News January 11, 2026
இராமநாதபுரம்: 2 டி.எஸ்.பிக்கள் அதிரடி இடமாற்றம்!

தமிழக காவல்துறையில் பணியாற்றி வந்த பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 24 டி.எஸ்.பி.க்களை (துணை காவல் கண்காணிப்பாளர்) இடமாற்றம் செய்து, DGP வெங்கட்ராமன் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி இராமநாதபுரம் மாவட்டம், கமுதி துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த இளஞ்செழியன், பொருளாதார குற்றப்பிரிவு DSP ராஜமுரளி ஆகியோர் வேறு இடத்திற்கு பணியிடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
News January 11, 2026
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

இன்று (ஜன.10) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.


