News January 5, 2026
ஏசி மின் ரயில் சேவையில் இன்று முதல் மாற்றம்

சென்னை: மின்சார ரயில் இயக்கம் மற்றும் பயணிகள் வசதியை கருத்தில் கொண்டு, சென்னை – செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் ஏசி மின்சார ரயில்களின் சேவையில் ஜன.5-ம் தேதி முதல் சில மாற்றங்கள் அமல்படுத்தப்பட உள்ளன. இதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்ல வேண்டிய ஏசி மின்சார ரயில், இனி மாலை 3.47 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.
Similar News
News January 31, 2026
சென்னை: வாடகை வீட்டில் இருக்கீங்களா?

சென்னையில், வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். ஷேர்!
News January 31, 2026
சென்னை: அரசு ஆபீஸில் தீக்குளித்த நபர்

விருதுநகரைச் சேர்ந்தவர் ஆல்பர்ட் (30). மாற்றுத்திறனாளியான இவர், வேளச்சேரி வெங்கடேஸ்வரா நகரில் தங்கி உள்ளார். இவர் பசுமை வழிச்சாலையில் உள்ள மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் மனு அளிப்பதற்காக நேற்று காலை சென்ற போது, நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்டிருந்தார். இதனால் விரக்தியடைந்த அவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
News January 31, 2026
சென்னையில் குடிநீர் நிறுத்தம்

நீர்ப்பரிமாற்ற குழாயில் ஏற்பட்டுள்ள கசிவை சரிசெய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், பிப்.1-ந் தேதி (நாளை) காலை 6 மணி முதல் 2-ந்தேதி காலை 10 மணி வரை தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர் மற்றும் அடையாறு மண்டலங்களுக்கு உட்பட்ட சில பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் வினியோகம் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்ட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.


