News May 3, 2024

IND-PAK டி20 போட்டி: ஹோட்டல் அறைகளின் வாடகை உயர்வு

image

டி20 உலகக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளை காண ரசிகர்கள் போட்டி போடுவதால், ஹோட்டல் அறைகளின் வாடகை உயர்ந்துள்ளது. அமெரிக்காவில், மே மாதம் 9ஆம் தேதி இந்தப் போட்டி நடைபெற உள்ளது. இதற்காக, ஹோட்டல் அறைகளின் வாடகை 600% சதவீதம் வரை உயர்ந்துள்ளது. அகமதாபாத்தில் இரு அணிகளுக்கும் இடையே கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையை காண வந்த ரசிகர்கள், ஹேட்டலில் இடம் இல்லாததால் மருத்துவமனைகளை புக் செய்தனர்.

Similar News

News February 8, 2026

RSS யாருக்கும் எதிரானது அல்ல: மோகன் பகவத்

image

RSS பின்னணி கொண்ட சில தனிநபர்கள் அரசியல் வாழ்க்கையில் தீவிரமாக இருந்தாலும், இந்த அமைப்பு அரசியலில் நேரடியாக தலையிடாது என மோகன் பகவத் கூறியுள்ளார். மும்பையில் நடைபெற்ற RSS நூற்றாண்டு நிகழ்ச்சியில் பேசிய அவர், RSS யாருக்கும் எதிரானது அல்ல என தெரிவித்தார். RSS சங்கத்தைப் போல செயல்படும் அமைப்பு உலகில் வேறு எங்கும் கிடையாது என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.

News February 8, 2026

தமிழ்நாட்டில் புதிதாக 6 மாவட்டங்கள்.. அடுத்த அறிவிப்பு

image

அதிமுக 2 கட்டங்களாக தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட நிலையில், விரைவில் 3-ம் கட்ட வாக்குறுதியை EPS வெளியிட உள்ளார். அதில், பொள்ளாச்சி, கும்பகோணம், ஆத்தூர், விருத்தாசலம், பழனி, சிவகாசி மாவட்டங்களுக்கான அறிவிப்பு இடம் பெற உள்ளதாம். மக்களின் நீண்டநாள் கோரிக்கை என்பதால் இந்த விவகாரத்தை அதிமுக கையில் எடுக்க உள்ளது. பழனியை தனி மாவட்டமாக அறிவிக்கக்கோரி வரும் 10-ம் தேதி பாஜக ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.

News February 8, 2026

QR Code மூலம் விருப்ப மனு.. புதிய பாதையில் தவெக

image

தவெக விருப்ப மனு அளிக்க தொடங்கிய நாளில், பனையூரில் பலரும் குவிந்ததால் அப்பகுதிவாசிகள் அவதிப்பட்டனர். இதனால் இணையதளம் மூலம் விருப்ப மனு அளிக்கும்படி கட்சியினருக்கு தவெக தலைமை உத்தரவிட்டது. இந்நிலையில், QR Code மூலமும் விருப்ப மனு அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவிலேயே முதல்முறையாக QR மூலம் விருப்ப மனு பெறும் கட்சி தவெக என தொண்டர்கள் கூறி மகிழ்கின்றனர். உங்கள் கருத்து என்ன?

error: Content is protected !!