News January 5, 2026

EPS-க்கு அருகதை இருக்கா? சிவசங்கர்

image

திமுகவை கார்ப்பரேட் கம்பெனி என கூறும் அதிமுக, எப்போதோ அடிமை கம்பெனியாக மாறிவிட்டதாக அமைச்சர் சிவசங்கர் சாடியுள்ளார். 55,000 லேப்டாப்களை வழங்காமல் வீணடித்த EPS-க்கு, திமுக அரசின் லேப்டாப் திட்டத்தை பற்றி பேச அருகதை இருக்கிறதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். அரசு திட்டங்கள் தன்னால் தான் நடந்தது எனக்கூறி வரும் EPS, ‘நானே எல்லாம் செய்பவன்’ என்ற கடவுள் மனப்பான்மையில் வாழ்ந்து வருவதாகவும் விமர்சித்தார்.

Similar News

News February 3, 2026

IND-க்கு எதிராக விளையாட PAK வைத்த கண்டிஷன்!

image

T20I WC-ல் இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் வாரியம் நிபந்தனை ஒன்றை விதித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது, T20I WC-ல் வங்கதேச அணியை சேர்த்தால்தான், பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக விளையாடும் என கண்டிஷன் வைத்துள்ளதாம். முன்னதாக, இந்தியாவுக்கு எதிராக விளையாட போவதில்லை என பாகிஸ்தானின் முடிவு சர்வதேச விளையாட்டுகளின் ஒருமைப்பாட்டில் <<19026883>>பாதிப்பை உண்டாக்கும்<<>> எனவும் ICC தெரிவித்திருந்தது.

News February 3, 2026

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹640 உயர்ந்தது

image

தங்கம் விலை இன்று (பிப்.3) சவரனுக்கு ₹640 உயர்ந்துள்ளது. 22 கேரட் தங்கம் 1 கிராமுக்கு ₹80 உயர்ந்து ₹14,030-க்கும், சவரன் ₹640 அதிகரித்து ₹1,12,240-க்கும் விற்பனையாகிறது. கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த <<19031901>>தங்கம்<<>>, இன்று மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. இதனால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

News February 3, 2026

‘ஜன நாயகன்’ சிக்கலால் ₹100 கோடியை இழந்த தியேட்டர்கள்

image

ஜனவரி 9-ம் தேதி வெளியாக வேண்டிய விஜய்யின் ‘ஜனநாயகன்’ இதுவரை திரைக்கு வரவில்லை. இதனால் தயாரிப்பாளர், OTT, சாட்டிலைட் உரிமம் பெற்றவர்கள் பெரும் பாதிப்பை சந்தித்தனர். இதில் குறிப்பாக தமிழ்நாடு தியேட்டர்களுக்கு மட்டும் ₹100 கோடிக்கு மேல் நஷ்டம் என கூறப்படுகிறது. ‘ஜன நாயகன்’ படம் திட்டமிட்டபடி வந்திருந்தால் TN-ல் மட்டும் ₹150-₹200 கோடிவரை வசூலித்திருக்கும் என சினிமா வட்டாரத்தினர் கூறுகின்றனர்.

error: Content is protected !!