News January 5, 2026
BREAKING: கிருஷ்ணகிரி- மூதாட்டி மீது தாக்குதல் மூவர் கைது

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அருகே நிலத் தகராறில் உண்ணாமலை (70) என்ற மூதாட்டியை தென்னை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய அவரது உறவினர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். பாகம் பிரிக்கப்படாத நிலத்தில் உழவுப் பணிகளைத் தடுத்த மூதாட்டியை குமார், கல்பனா மற்றும் பிரபாகரன் ஆகியோர் தாக்கிய நிலையில், வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் காவேரிப்பட்டணம் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News January 30, 2026
கிருஷ்ணகிரி: தறிகெட்டு ஓடிய லாரி; பறிபோன உயிர்!

சூளகிரி, பெரிய சப்படியை சேர்ந்த 3 பேர் நேற்று பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அவ்வழியாக வேகமாக வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் பைக்கை ஓட்டி வந்த அஜித்குமார் (27) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த முரளி, முனுசாமி ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து தகவலறிந்த கிராம மக்கள் கனரக வாகனங்கள் கட்டுப்பாடின்றி இயக்கப்படுவதை கண்டித்து மறியலில் ஈடுபட்டனர்.
News January 30, 2026
கிருஷ்ணகிரி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். காலை 9 மணி முதல் 1 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் 10, 12-ஆம் வகுப்பு, பட்டதாரிகள், ஐடிஐ மற்றும் டிப்ளமோ பயின்றவர்கள் பங்கேற்கலாம். முன்னணி நிறுவங்கள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் விபரங்களுக்கு இந்த 04343-291983 எண்ணில் அழைக்கவும். ஷேர் IT