News January 5, 2026
திருச்சி: வணிகர்கள் நல சங்க தலைவருக்கு கத்து குத்து!

மண்ணச்சநல்லூரை சேர்ந்த வணிகர்கள் நல சங்க தலைவர் ராஜேந்திரன் (65) என்பவரை மர்ம நபர்கள் கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதனையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து விசாரணையில், தொழில் போட்டி காராணமாக கூலிப்படையை வைத்து, கொலை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது. இதையடுத்து, சம்பவத்திற்கு காரணமான வெங்கடேஷ் மற்றும் அவரது சகோதரி சிவகாமி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News January 23, 2026
திருச்சி மைய நுாலகத்தில் செஸ் பயிற்சி முகாம்

திருச்சி மாவட்ட மைய நுாலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில், மாவட்ட மைய நுாலகத்தில் வரும் ஜன.25ம் தேதி மதியம் பகல் 2.30 மணி முதல் மாலை 4. மணி வரை, குழந்தைகளுக்கான செஸ் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில், தேசிய செஸ் பயிற்சியாளர் வெங்கட்ராமன் பயிற்சி அளிக்க உள்ளனர். இதில், குழந்தைகள் தங்களது பெற்றோருடன் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட நுாலக அலுவலர் சரவணக்குமார் அறிவித்துள்ளார்.
News January 23, 2026
திருச்சி: மாத ஓய்வூதியம் + ரூ.20,000 உதவித் தொகை – APPLY!

திருச்சி மக்களே மாத ஓய்வூதியம், கல்வி செலவு ரூ.8000, திருமண உதவிதொகை ரூ. 20,000, கர்ப்பிணி உதவிதொகை ரூ. 18,000 மற்றும் இலவச காப்பீடு என அனைத்தும் தினக்கூலி பணியாளர்கள், சொந்த தொழில் செய்பவர்களுக்கு தமிழக அரசு வழங்குகிறது. இதெல்லாம் கிடைக்க இங்கு <
News January 23, 2026
திருச்சி: இன்று மின்தடை அறிவிப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை, தியாசேகர் ஆலை, விடத்திலாம் பட்டி, மற்றும் பன்னாங்கொம்பு ஆகிய துணை மின் நிலையத்தில் இன்று(ஜன.23) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக காலை 9 மணி முதல் 4 மணி வரை அங்கிருந்து மின்விநியோகம் பெறும் மணப்பாறை நகரம், வெள்ளக்கல், நொச்சிமேடு, பொத்தமேட்டுப்பட்டி, மஞ்சம்பட்டி, , களத்துப்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் மின்விநியோகம் இருக்காதென தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.!


