News January 5, 2026
மயிலாடுதுறை: மனைவி தள்ளியதால் கணவன் பலி!

மணல்மேடு பாக்கம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி (42) எலக்ட்ரீசியனான இவருக்கும் இவரது மனைவி ரஞ்சிதாவிற்கும் ஏற்பட்ட குடும்ப தகராறில் அவர் ரஞ்சிதாவை தாக்க முற்பட்ட போது ரஞ்சிதா தடுக்க முயன்றார். அப்போது தடுமாறி ராஜீவ்காந்தி சுவரில் மோதி கீழே விழுந்தார். இதையடுத்து ரஞ்சிதா மறுநாள் காலையில் பார்த்தபோது அவர் உயிரிழந்திருந்தார். தகவலறிந்த போலீசார் உடலை கைப்பற்றி ரஞ்சிதாவை கைது செய்தனர்
Similar News
News January 16, 2026
மயிலாடுதுறை மாவட்ட மக்களுக்கு போட்டிகள் அறிவிப்பு

உலகப் பொதுமறையான திருக்குறளின் பெருமையைப் போற்றும் வகையில், மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை இணைந்து நடத்தும் பொதுமக்களுக்கான திருக்குறள் ஒப்புவித்தல் மற்றும் ஓவியப் போட்டி வரும் ஜன.19 காலை 10:30 மணி அளவில், மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் நடைபெறவுள்ளன. இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் நேரில் வந்து பதிவு செய்து கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
News January 16, 2026
மயிலாடுதுறை: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

மயிலாடுதுறை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல்<
News January 16, 2026
மயிலாடுதுறை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

மத்திய சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் தொழுநோய் பாதிப்பு அதிகமுள்ள குத்தாலம் மற்றும் கொள்ளிடம் வட்டாரங்களில் வரும் ஜனவரி 19-ம் தேதி முதல் தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு இயக்கம் தொடங்கப்பட உள்ளது. இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், வேண்டுகோள் விடுத்துள்ளார்.


