News January 5, 2026

கள்ளக்குறிச்சியில் மின் தடை!

image

சங்கராபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகளால் நாளை(ஜன.6) சங்கராபுரம், பாண்டலம், வட சிறுவள்ளூர், வடசெடீயந்தல், திம்மனந்தல், கிடங்குடையாம்பட்டு, ஆரூர், ராமராஜபுரம், பூட்டை, செம்பராம்பட்டு, அரசம்பட்டு, அரசராம்பட்டு, மஞ்சபுத்தூர், பொய்யாக்குணம், விரியூர், எஸ்.வி.பாளையம், எஸ்.குளத்தூர், மேலேரி, கீழப்பட்டு, தும்பை, கூடலூர் பகுதிகளில் காலை 9 – 2 மணி வரை மின் தடை. <>தொடர்ச்சி<<>>

Similar News

News January 20, 2026

மணலூர்பேட்டை சம்பவம்; இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம்!

image

மணலூர்பேட்டை கிராமத்தில் நேற்று(ஜன.19) நடைபெற்ற தீர்த்தவாரி திருவிழாவின் போது பலூன்களை நிரப்பும் கேஸ்சிலிண்டர் எதிர்பாராதவிதமாக வெடித்ததில் தி.மலையைச் சேர்ந்த கலா என்பவர் பலியானார். மேலும், 18 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம், சிகிச்சை பெறுவோர் குடும்பத்திற்கு தலா ரூ. 1 லட்சம், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்க தமிழக அரசு அறிவித்துள்ளது.

News January 20, 2026

மணலூர்பேட்டை விபத்தில் இறந்தவர் புகைப்படம் வெளியானது!

image

கள்ளக்குறிச்சி: மணலூர்பேட்டை ஆற்றுத் திருவிழாவின்போது மணலூர்பேட்டை ஆஞ்சநேயர் கோயில் அருகே பலூன்களுக்கு நிரப்பப்படும் சிலிண்டர் வெடித்த விபத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கலா என்பவர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், உயிரிழந்த கலாவின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் 18 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News January 20, 2026

கள்ளகுறிச்சி: ரூ.20 தந்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும்! CLICK

image

கள்ளக்குறிச்சி மக்களே.., உங்களுக்கு ரூ. 2 லட்சம் காப்பீடு வழங்க மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீம யோஜனா’ திட்டம் உள்ளது. ஆண்டிற்கு ரூ.20 மட்டும் செலுத்தினால் போதும். இந்தத் திட்டத்திற்கு யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். இதற்கான படிவத்தை <>இங்கே கிளிக் <<>>செய்து பதிவிறக்கம் செய்யுங்கள். அந்த படிவத்தை பூர்த்தி செய்து, வங்கி மேலாளரிடம் கொடுத்தால் போதும். உடனே அனைவருக்கும் SHARE!

error: Content is protected !!