News January 5, 2026

திமுகவுக்கு 90 நாள்கள் தான் இருக்கு: அண்ணாமலை

image

505 வாக்குறுதிகளில் 50-ஐக் கூட நிறைவேற்றாத CM, 80% பணிகளை முடித்துவிட்டதாக பொய் சொல்வதாக அண்ணாமலை கூறியுள்ளார். அது உண்மை என்றால், ஒவ்வொரு வாக்குறுதியும் நிறைவேற்றப்பட்ட தேதியை அரசால் வெளியிட முடியுமா என்ற அவர், TN-ல் எங்கு சென்றாலும், இந்த ஆட்சி எப்போது அகலும் என்ற பேச்சுதான் மேலோங்கியுள்ளது என விமர்சித்துள்ளார். மேலும், திமுகவுக்கு இன்னும் 90 நாள்கள்தான் மிச்சமுள்ளது எனவும் பேசியுள்ளார்.

Similar News

News February 3, 2026

எதிர்க்கட்சிகளின் அமளியால் லோக் சபா ஒத்திவைப்பு

image

இந்திய – அமெரிக்க வர்த்தக விவகாரம் குறித்து பேச வேண்டும் என வலியுறுத்தி லோக் சபாவில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகரின் இருக்கை அருகே சென்ற காங்கிரஸ் உள்ளிட்ட இண்டியா கூட்டணி MP-க்கள், பாஜகவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனையடுத்து 12 மணிவரை அவை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.

News February 3, 2026

50 ஆண்டுகளுக்கு பின் நிலவுப் பயணம்.. NASA-வுக்கு சிக்கல்

image

US-ல் இருந்து 50 ஆண்டுகளுக்கு பின் மனிதர்களை நிலவுக்கு சுமந்து செல்லும் ‘ஆர்டெமிஸ் -2’ விண்கலத்தின் கவுண்ட் டவுன் பாதியில் நிறுத்தப்பட்டது. ஹைட்ரஜன் லீக் காரணமாக இந்த தடை ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே கடும் குளிர் காரணமாக பயணம் தள்ளிப்போன நிலையில் இப்போது புதிய பிரச்னை உருவாகியுள்ளது. சிக்கலை நாசா உடனடியாக சரிசெய்தால் பிப்.11-க்குள் நிலவு பயணம் சாத்தியமாகும், இல்லையென்றால் மார்ச்-க்கு தள்ளிபோகுமாம்.

News February 3, 2026

மக்கள் துணையோடு திமுக ஆட்சிக்கு முடிவு: EPS

image

அண்ணாவின் 57-வது நினைவு தினத்தையொட்டி, அசாத்திய வாழ்க்கை வாழ்ந்த சாமானிய மனிதன் அண்ணா என EPS புகழாரம் சூட்டியுள்ளார். அன்றைய கொடுங்கோல் காங்., ஆட்சியை வீழ்த்த, மக்களுக்கான கூட்டணி அமைத்து அண்ணா கண்ட வெற்றிதான், TN அரசியலை அடுத்த நூற்றாண்டுக்கு கட்டமைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் மக்கள் துணையோடு திமுக ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!