News January 5, 2026

தி.மலை அருகே நொடி பொழுதில் விபத்து – பறிபோன உயிர்!

image

வந்தவாசி அடுத்த தேசூர் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் மற்றும் சீனிவாசன். இருவரும் தனியார் பஸ் டிரைவரைகள். இவர்கள் வேலை விஷயமாக செய்யாருக்கு மோட்டார்சைக்களில் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பினர். மலையூர் கிராமம் அருகே வந்தபோது மோட்டார்சைக்கிள் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். மருத்துமனையில் அனுமதித்த போது சீனிவாசன் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

Similar News

News January 30, 2026

தி.மலையில் குறைந்த விலையில் வாகனம்- DON’T MISS!

image

திருவண்ணாமலை மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலகத்தின் TN 21 G0793 (Bolero Lx) அரசு வாகனம் பொது ஏலத்தில் விற்பனை செய்யப்படுகிறது. அரசு வழிகாட்டு மதிப்பு ரூ.1 லட்சம். 04.02.2026 காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஏலம் நடைபெறும். ஏலத்தில் பங்கேற்க ரூ.5,000 முன் வைப்பு தொகை செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

News January 30, 2026

தி.மலை: தூக்கில் தொங்கிய பெண்

image

சேத்துப்பட்டு தாலுகா தேவிகாபுரத்தை சேர்ந்தவர் சிவகுமார், பானிபூரி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மோனிகா (27). கணவன்-மனைவிக்கு ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மோனிகா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மோனிகாவின் தம்பி மேகநாதன் சேத்துப்பட்டு போலீசில் புகார் அளித்த நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. *தற்கொலை எதற்கும் தீர்வல்ல*.

News January 30, 2026

தி.மலை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (ஜன.29) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!