News January 5, 2026
தாரமங்கலம்: மகனின் பிறந்த நாளில் ஏற்பட்ட சோகம்!

தொட்டம்பட்டியை சேர்ந்த தமிழ்மணியும், அவரது தம்பி பொன்னுமணியும் பெங்களூரில் இருந்து தங்களது இருசக்கர வாகனத்தில் ஓமலூர் வந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ஓமலூர் அருகே அவர்களது டூவீலர் மீது ஜீப் மோதியதில் தமிழ்மணி உயிரிழந்தார். தமிழ்மணி தனது மகனின் பிறந்த நாளை கொண்டாட இருவரும் வந்த போது விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இது குறித்து தாரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News January 22, 2026
சேலம்: உணவில் தரம் இல்லையா ? இத பண்ணுங்க!

சேலம் மாவட்டத்தில் உள்ள விடுதிகள், ஹோட்டல்கள் மற்றும் சாலையோரக் கடைகள் இயங்கி வருகிறது. இங்கு வழங்கப்படும் உணவின் தரம் அல்லது சுகாதாரத்தில் குறைபாடுகள் இருந்தால், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இது குறித்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலரை 9444042322 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் புகாரளிக்கலாம். உங்கள் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News January 22, 2026
சேலம்: ரூ.520-ல் ரூ.10 லட்சம் காப்பீடு!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்
News January 22, 2026
சேலத்தில் அதிரடி தீர்ப்பு!

சேலம் அம்மாபேட்டையைச் சேர்ந்த அர்ஷத் அலி(40), தனது மனைவி பல்கிஷை(28) வரதட்சணை கேட்டுத் துன்புறுத்தியதால், திருமணமான ஏழே மாதங்களில் பல்கிஷ் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து அம்மாபேட்டை மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து, அர்ஷத் அலியை கைது செய்தனர். மேலும் சேலம் மகளிர் நீதிமன்றம், குற்றம் உறுதி செய்யப்பட்டதையடுத்து அர்ஷத் அலிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தது.


