News January 5, 2026
காரைக்குடி தொகுதியில் போட்டியா? சீமான்

பல தொகுதிகளுக்கான நாம் தமிழர் வேட்பாளர்களை சீமான் அறிவித்துவிட்டார். இதனிடையே அவர் காரைக்குடியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது திருச்சி மாநாட்டில், தான் போட்டியிடும் தொகுதி குறித்து அறிவிக்கப்படும் என தெரிவித்தார். கூட்டணி இல்லாமல் வெற்றி பெற முடியாது என்பது பொய் என்றும், ஜெயலலிதா, கெஜ்ரிவால் ஆகியோர் தனித்து நின்று வெற்றி பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
Similar News
News February 19, 2026
ரஜினி, கமல் படம்.. வெளியாகும் தெறி அப்டேட்

46 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசன், ரஜினிகாந்த் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் இன்று மாலை 7:12 மணிக்கு வெளியாகிறது. நெல்சன் இப்படத்தை இயக்குவது உறுதியாகியுள்ள நிலையில், கடந்த வாரம் சென்னையில் புரொமோ ஷூட் நடைபெற்றுள்ளது. இதையடுத்து இரு நட்சத்திரங்கள் இணைவது போன்ற போஸ்டரை ரெட்ஜெயண்ட் நிறுவனம் பகிர்ந்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
News February 19, 2026
அதிமுகவில் மு.க.அழகியிரின் மற்றொரு ஆதரவாளர்?

பி.எம்.மன்னனை தொடர்ந்து மு.க.அழகிரியின் மற்றொரு தீவிர ஆதரவாளரான எஸ்.ஆர்.கோபியும் அதிமுகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக தலைமை செயற்குழு உறுப்பினராக உள்ள அவர், விரைவில் தனது ஆதரவாளர்களுடன் EPS முன்னிலையில் அதிமுகவில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. மு.க.அழகிரி ஆதரவாளர்களின் வருகையால் மதுரையில் அதிமுக மேலும் வலுப்பெறும் என அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர்.
News February 19, 2026
BREAKING: பெண்களுக்கு ₹2000.. தமிழக அரசு புதிய அறிவிப்பு

இனி ஆண்டுதோறும் மகளிருக்கு கோடைகால சிறப்பு நிதியாக ₹2000 வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் சற்றுமுன் அறிவித்துள்ளார். கோடை காலம் வரவுள்ளதால், வெயில் தாக்கத்தால் மக்களுக்கு மருத்துவ செலவு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், இந்த கோடைகால சிறப்பு தொகை வழங்கப்படுவதாக விளக்கமளித்துள்ளார்.


