News May 3, 2024
நாளை இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

வட தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் நிலவும் வெப்ப அலை காரணமாக சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், நாமக்கல், கரூர், மதுரை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 13, 2025
டாஸ்மாக் கடைகளில் 12,000 பில்லிங் மெஷின்கள்..!

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் 12,000 பில்லிங் மெஷின்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருவதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். இனி மது பாட்டிலுக்கு ஒரு ரூபாய் கூட அதிகமாக வாங்க முடியாது என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார். காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டமும் விரைவில் நடைமுறைக்கு வரும் எனவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
News August 13, 2025
3 நாள்கள் தொடர் விடுமுறை.. இன்று முதல் சிறப்பு பஸ்கள்

ஆக.15, 16, 17-ல் பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை என்பதால் சொந்த ஊர்களுக்கு செல்வோர் ரயில்கள், பஸ்களில் முன்பதிவு செய்து வருகின்றனர். கூட்ட நெரிசலை தவிர்க்க தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. அதேபோல், தமிழக அரசும் <<17375212>>சிறப்பு பஸ்களை<<>> அறிவித்துள்ளது. கடைசி நேர சிரமத்தை தவிர்க்கும் வகையில் இதுவரை சுமார் 70,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். நீங்க கிளம்பியாச்சா?
News August 13, 2025
பாசமும், மரியாதையும்.. ரஜினிக்கு கமல் வாழ்த்து

‘எங்களைப் போன்று (கமல், ரஜினி) நண்பர்கள் சினிமாவில் இருந்ததில்லை, இனி இருக்கப் போவதுமில்லை’ என்று கமல்ஹாசன் கூறியது இன்றும் இருவரது ரசிகர்களின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளது. இந்நிலையில், திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் சூப்பர் ஸ்டாரை பாசத்துடனும், மரியாதையுடனும் கொண்டாடுவதாக கமல் பாராட்டியுள்ளார். ‘கூலி’ படமும் மாபெரும் வெற்றி பெற அவர் வாழ்த்தியுள்ளார்.