News January 5, 2026

738 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் அழிப்பு

image

நாமக்கல் மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு அமல்பிரிவு மற்றும் காவல் நிலையங்கள் மூலம் 88 கஞ்சா வழக்குகளில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளிடமிருந்து காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 738.776 கிலோ கஞ்சா உள்ளிட்டபோதைப் பொருட்கள் ஒழிப்புக்குழு ஐ.ஜி அனில்குமார் கிரி உத்தரவின் பேரில் சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் நாமக்கல் மாவட்ட எஸ் பி விமலா முன்னிலையில் தீயிட்டு அழிக்கப்பட்டது.

Similar News

News January 21, 2026

நாமக்கல் இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், இரவு நேர காவல் ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் மற்றும் சட்ட ஒழுங்கை பராமரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் அவசர நிலை ஏற்பட்டால், பொதுமக்கள் தங்களது பகுதி காவல் அதிகாரியை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.

News January 20, 2026

நாமக்கல்: ரூ.20 தந்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும்!

image

நாமக்கல் மக்களே உங்களுக்கு ரூ.2 லட்சம் காப்பீடு வழங்க மத்திய அரசின் பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீம யோஜனா திட்டம் அமலில் உள்ளது. இதற்கு ஆண்டிற்கு ரூ.20 மட்டும் செலுத்தினால் போதும். வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான படிவத்தை <>இங்கே கிளிக் <<>>செய்து பதிவிறக்கம் செய்யுங்கள்.அந்த படிவத்தை பூர்த்தி செய்து, உங்கள் வங்கி மேலாளரிடம் கொடுத்தால் போதும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News January 20, 2026

நாமக்கல்: லஞ்சம் கேட்டாங்களா? இத பண்ணுங்க!

image

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை dspnmkdvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 04286- 281331 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!