News January 5, 2026

அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்களின் விபரம்

image

அரியலூர் மாவட்டத்தில், நேற்று(ஜன.4) இரவு 10 மணி முதல், இன்று(ஜன.5) காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

Similar News

News January 11, 2026

அரியலூர் மாவட்டத்தில் பொங்கல் கலை விழா அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் உலக பிரசித்தி பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலய வளாகத்தில், வருகின்ற ஜன.15 மற்றும் 16 ஆகிய 2 தினங்களில், மாலை 5 மணி முதல் 8 மணி வரை பொங்கல் கலை விழா, கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. தைத்திருநாள் பொங்கல் விழாவை சிறப்பிக்கும் வகையில், பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி மகிழ்ந்து கொண்டாடும் நோக்குடன், தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டு துறையால் பொங்கல் விழா நடைபெற உள்ளது.

News January 11, 2026

அரியலூர்: DSP பணியிடமாற்றம்

image

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் டிஎஸ்பியாக பணிபுரிந்து வந்த ரவி சக்கரவர்த்தி, கடலூர் மாவட்டம் சேத்தியா தோப்பு பகுதிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் டிஎஸ்பி ஆக பணி ஆற்றி வந்த பலர், டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் ஜெயங்கொண்டம் டிஎஸ்பி பணி மாறுதல் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

News January 11, 2026

அரியலூர்: ஆட்சியர் அறிவுறுத்தல்

image

அரியலூர் மாவட்டத்தில் போகி பண்டிகையில் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவு பொருட்களை கொளுத்தாமல், மாசு இல்ல போகி கொண்டாட வேண்டும் என ஆட்சியர் ரத்தினசாமி வலியுறுத்தியுள்ளார். மேலும் சுற்றுப்புற காற்றின் தன்மை மாசுபடுவதோடு, கண், மூக்கு, தொண்டை, தோல் எரிச்சல் மற்றும் ஆஸ்துமா மூச்சு திணறல் உள்ளிட்ட பல்வேறு உடல் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் மாசில்லா போகி கொண்டாட மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!