News January 4, 2026
இது டிரம்ப் நடத்தும் ஆபத்தான நாடகம்: கமலா ஹாரிஸ்

வெனிசுலா அதிபர் மதுரோவை கைது செய்தது என்பது தன்னை ஒரு உலக மகா சக்தியாக காட்டிக்கொள்ள டிரம்ப் நடத்தும் ஒரு ஆபத்தான நாடகம் என அமெரிக்க Ex.துணை அதிபர் கமலா ஹாரிஸ் விமர்சித்துள்ளார். மேலும் இந்த ராணுவ நடவடிக்கையால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. எண்ணெய் வளத்திற்காக பிராந்திய அமைதியை சீர்குலைத்து, அமெரிக்க மக்களை மீண்டும் ஒரு தேவையற்ற போருக்குள் தள்ளும் முதிர்ச்சியற்ற செயல் என சாடியுள்ளார்.
Similar News
News January 13, 2026
விழுப்புரத்தில் இனி அலைச்சல் இல்லை – இது போதும்!

ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், பான் கார்டு, வோட்டர் ஐடி ஆகியவற்றை விண்ணப்பிக்க அரசு அலுவலகங்களுக்கு செல்கிறீர்களா? இனி அவ்வாறு சென்று அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம்: https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink <
News January 13, 2026
பொங்கல் பரிசு.. சோகச் செய்தி வந்தது

பொங்கல் பரிசுத் தொகையை அனைவரும் சந்தோஷமாக வாங்கிவரும் போது, ஒரு குடும்பத்திற்கு மட்டும் அது சோகத்தில் முடிந்துள்ளது. கோவை நாகராஜபுரம் அருகிலுள்ள ரேஷன் கடைக்கு சென்ற மூதாட்டி வீரம்மாள்(87) சாலையில் மயங்கியுள்ளார். இவரை ஹாஸ்பிடலில் அனுமதித்த போது அவர் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். இப்படியான சூழலை தவிர்க்க முதியவர்களுக்கு வீடுகளுக்கே சென்று ₹3000 வழங்கலாமே எனக் கோரிக்கை வலுத்துள்ளது.
News January 13, 2026
அப்போ தோனி.. இப்போ கோலி!

NZ-க்கு எதிரான முதல் ODI-யின் போது, ரோஹித் அவுட்டாகி பெவிலியன் திரும்பும் போது, ரசிகர்கள் கோலியின் என்ட்ரிக்கு ஆரவாரம் செய்தனர். இந்நிலையில், ஒரு வீரர் அவுட்டாகி வெளியேறும் போது, ரசிகர்கள் தனக்கு உற்சாக வரவேற்பளிப்பது சரியல்ல என கோலி தெரிவித்துள்ளார். இதே போன்று தான் தோனிக்கும் ரசிகர்கள் ஆதரவு அளித்தனர் என குறிப்பிட்ட அவர், அவுட்டாகி வெளியேறும் வீரரின் மனநிலையை உணர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.


