News January 4, 2026

திருவள்ளூரில் வாடகை வீட்டுக்கு போறீங்களா? இது முக்கியம்!

image

திருவள்ளூரில், வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். ஷேர்!

Similar News

News February 15, 2026

கும்மிடிப்பூண்டியில் அதிரடி கைது!

image

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி பகுதி ஏலாவூர் சோதனைச் சாவடியில் 30க்கும் மேற்பட்ட ஆட்கள் வாகனங்களை நிறுத்தி வாகனங்களை பரிசோதிக்கும் வேலையில் சுழற்சி முறையில் செய்து வருகின்றனர். இந்நிலையில், வேலையாட்களுக்கும் அதிகாரிகளுக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகாரிகள் வேலையாட்கள் மீது ஆரம்பாக்கம் போலீஸிடம் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரின் பேரில் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

News February 15, 2026

திருவள்ளூரில் பயங்கர தீ விபத்து!

image

கடம்பத்தூர் ஒன்றியம் புதுவள்ளூர் கிராமம், பால்வாடி தெருவைச் சேர்ந்தவர் விமலா(38). நேற்று முன் தினம் விமலா, வழக்கம் போல் தன்னுடைய வீட்டை பூட்டி விட்டு, வேலைக்கு சென்றார். அப்போது, அவரது வீட்டில் எதிர்பாராத விதமாக மின் கசிவு ஏற்பட்டது. இதனால், பயங்கர தீ பரவி, துணிமணிகல், சாமான்கள், சான்றிதழ்கள், ரூ.43 ஆயிரம் பணம் போன்றவை தீயில் எரிந்து நாசமானன. இதுகுறித்து மணவாளநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 15, 2026

திருவள்ளூர்: கணவன் கொடுமையால் இளம்பெண் தற்கொலை!

image

பெங்களூரைச் சேர்ந்தவர் மோகனஸ்ரீ(27). இவருக்கும் ஆர்.கே.பேட்டையைச் சேர்ந்த குணசேகரன்(35) என்பவருக்கும் கடந்த 2021-யில் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஆஷிகா(3) என்ற மகள் உள்ளார். இருவரும் பெங்களூரில் வசித்த நிலையில், அடிக்கடி தகராறு ஏற்பட்டது. மனைவியை பூட்டி வைப்பது, தலையணை வைத்து கொலை செய்ய முயற்சிப்பது என தொடர் கொடுமைகள் நடந்துள்ளன. இதனால், அச்சமடைந்த மோகனஸ்ரீ தற்கொலை செய்துகொண்டார்.

error: Content is protected !!