News January 4, 2026
தூத்துக்குடி: தாமிரபரணி ஆற்றை ஆய்வு செய்யும் அதிகாரி

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்த கோரி சமூக ஆர்வலர் ஒருவர் மதுரை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்து நீதிமன்றம் உத்தரவை சரிவர செய்யாததாக கூறி மேல் முறையீடு வழக்கு மீண்டும் தொடுக்கப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி ஆகியோர் இது தொடர்பாக ஆய்வு நடத்த ராஜஸ்தானை சேர்ந்த நிபுணர் ராஜேந்திரசிங் என்பவர் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Similar News
News January 29, 2026
11 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாற்றம்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வரும் 11 பேர்கள் திருச்செந்தூர், கோவில்பட்டி, கருங்குளம், ஸ்ரீவை. பகுதி ஊராட்சி ஒன்றிய பணியிடங்களுக்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பை மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார். பணிமாறுதலானவர்கள் உடனடியாக பொறுப்பேற்கவும் உத்தரவிட்டார்.
News January 29, 2026
தூத்துக்குடி: இனி ஆதார் அப்டேட் செய்வது EASY

தூத்துக்குடி மக்களே, இனி ஆதாரை update செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு, <
News January 29, 2026
தூத்துக்குடி மக்களுக்கு எஸ்பி எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபகாலமாக ஆன்லைனில் பகுதிநேர வேலை வாய்ப்பு என சமூக வலைதளங்கள் மூலம் மோசடி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. எனவே, ஆன்லைன் மூலம் பகிரப்படும் போலி பகுதி நேர வேலை வாய்ப்பு உள்ளிட்ட செய்திகள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டுமென மாவட்ட எஸ்.பி ஆல்பர்ட் ஜான் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.


