News January 4, 2026

உள்ளத்தில் பொங்கும் மகிழ்ச்சி.. ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து

image

பொங்கல் கொண்டாட்டத்தில் இருப்பது போன்ற AI போட்டோவை X தளத்தில் பகிர்ந்த CM ஸ்டாலின், மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ஒவ்வொரு இல்லத்திலும் மகிழ்ச்சி பொங்கும் தைப் பொங்கல் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், உள்ளத்தில் பொங்கும் மகிழ்ச்சி இல்லத்தில் கொண்டாட்டமாக நிறைய பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ₹3,000 வழங்குகிறது நமது திராவிட மாடல் அரசு எனத் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 22, 2026

திருவள்ளூர்: CBI வங்கியில் 350 காலியிடங்கள்! APPLY

image

திருவள்ளூர் மக்களே.., CBI வங்கியில் 350 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.44,480 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் உடனே இங்கு <>க்ளிக் <<>>செய்து பிப்.03-க்குள் விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 22, 2026

இனி வீட்டிலிருந்தே பத்திரப்பதிவு… நோ டென்ஷன்!

image

பத்திரப் பதிவுத்துறையின் 18 சேவைகளை உள்ளடக்கிய ஸ்டார் 3.0 செயல் திட்டத்தினை CM ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இதில் வீட்டிலிருந்தபடியே காகிதமில்லா ஆவணப்பதிவு, தானியங்கி பத்திர உருவாக்கம், திருமணப் பதிவு உள்பட முக்கிய சேவைகள் இடம்பெற்றுள்ளன. மேலும் எந்த முறைகேடும் இன்றி தொழில்நுட்ப உதவியுடனும், வெளிப்படை தன்மையுடன் பத்திரப்பதிவு நடைபெற வேண்டி இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 22, 2026

BREAKING: நடிகர் முரளி கிருஷ்ணா காலமானார்

image

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகியின் மகன் முரளி கிருஷ்ணா (65) காலமானார். ஜானகியின் ஒரே மகனான இவர் பரதநாட்டிய கலைஞர் ஆவார். அத்துடன், ’விநாயகுடு’, ‘மெல்லபுவு’ போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ள இவர், ‘கூலிங் கிளாஸ்’ என்ற மலையாள படத்தில் எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். இவரது மறைவுக்கு, திரையுலகினர் மற்றும் எஸ்.ஜானகியின் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!