News January 4, 2026

உங்கள் உடலில் சிறிய எலும்பு எது தெரியுமா?

image

★வளர்ந்த மனிதரின் உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன ★10 ஆண்டுகளுக்கு ஒருமுறை எலும்பு செல்கள் புதுப்பிக்கப்படுகின்றன ★பாதங்களில் 26, கைகளில் (மணிக்கட்டுகள் உள்பட) 54 எலும்புகள் உள்ளன ★மிக நீளமான, மிக வலுவான எலும்பு தொடை எலும்பு (femur) ★உடலின் மிகச்சிறிய எலும்பு, காதில் உள்ள ‘ஸ்டேப்ஸ்’ எலும்பு ★மற்றொரு எலும்புடன் தொடர்பில்லாத ஒரே எலும்பு நாக்கின் அடியில் காணப்படும் V வடிவ hyoid எலும்பு.

Similar News

News January 24, 2026

கனமழை எச்சரிக்கை.. 8 மாவட்ட மக்களே உஷார்!

image

<<18944035>>மஞ்சள் அலர்ட்டை<<>> தொடர்ந்து திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், இரவு 10 மணி வரை சென்னை, செங்கை, திருவள்ளூர், காஞ்சி, விழுப்புரம், கடலூர், ராமநாதபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. ஆகையால், இரவில் அத்தியாவசியத் தேவையின்றி வெளியே செல்வதை தவிருங்கள். உங்க ஊருல மழை பெய்யுதா நண்பா?

News January 24, 2026

திமுகவை வீழ்த்த அதிமுகவில் இணைந்தேன்: தர்மர்

image

OPS-ன் ஆதரவாளரான தர்மர் MP உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் EPS முன்னிலையில் அதிமுகவில் மீண்டும் இணைந்தனர். இதன்பின் தர்மர் பேசுகையில், ஜெ.,வின் கனவை நனவாக்கவும், திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதற்காகவும் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளோம். யாரிடமும் எனக்கு கருத்து வேறுபாடு இல்லை; சுயநலமாக எடுத்த முடிவுதான் எனத் தெரிவித்தார். அதேநேரம் OPS குறித்து அவர் கருத்து எதுவும் கூறவில்லை.

News January 24, 2026

காய்ச்சலின் போது குழந்தைகள் குளிக்கலாமா?

image

குழந்தைகளுக்கு ஜுரம் வந்தால் குளிக்கலாமா என்ற சந்தேகம் பெற்றோர்களுக்கு இருக்கிறது. காய்ச்சலின்போது உடல் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும். இதனால் உடல் சூட்டை தணிக்கவும், உடலில் சேரும் பாக்டீரியாக்களை நீக்கவும் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது நல்லது என டாக்டர்கள் கூறுகின்றனர். ஆனால், சாதாரண காய்ச்சலுக்கு மட்டுமே இது பொருந்தும். SHARE IT.

error: Content is protected !!