News May 3, 2024
விழுப்புரத்தில் திடீரென பழுதான கேமராக்கள்

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள, அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி பகுதியில் நடைபெற்ற தேர்தலின்போது வாக்கு பதிவு செய்யப்பட்ட பெட்டிகள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு திடீரென இன்று (மே 3) யுபிஎஸ் பேட்டரிகள் பழுதானதால், சுமார் 20 நிமிடங்கள் சிசிடிவி கேமராக்கள் செயல் இழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News July 4, 2025
விழுப்புரம்: போதைப் பொருள் விழிப்புணர்வு – எஸ்.பி பாராட்டு

விழுப்புரம் மாவட்டத்தில் ‘ போதையில்லா தமிழ்நாடு’ திட்டத்தின் மூலம் பல்வேறு அறக்கட்டளை சார்பில் 57 அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகளில் போதைப்பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனைப் பாராட்டி, மாவட்ட எஸ்.பி சரவணன் மனிதம் காப்போம் அறக்கட்டளை நிறுவனர் சந்துருவை நேரில் அழைத்து பாராட்டினார். உடன் சரோஜினி கல்வி அறக்கட்டளை நிறுவனர் அருள்ராஜ் பங்கேற்றார்.
News July 4, 2025
சிறுமியின் தலையில் சிக்கிக்கொண்ட பாத்திரம்

செஞ்சி பேரூராட்சி சக்கராபுரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பிரபாகரன் – சுமித்ரா தம்பதியரின் 2 வயது மகள் மதுமிதா, இன்று (ஜூலை 04) விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஒரு சிறிய பாத்திரத்தைத் தலையில் மாட்டிக்கொண்டார். பெற்றோர் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி பாத்திரத்தை அகற்றினர்.
News July 4, 2025
காய்கறிகள் விதைத்தொகுப்பு வழங்கல்

கோலியனூர் தெற்கு ஒன்றியம், அத்தியூர் திருவாதியில் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பாக நடைபெற்ற 2025-2026ஆம் ஆண்டிற்கான ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டத்தை விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளரும், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் இரா.இலட்சுமணன் துவக்கி வைத்து காய்கறிகள் விதைத்தொகுப்பு, பழச்செடிகள் தொகுப்புகளை விவசாயிகளுக்கு வழங்கினார்.