News May 3, 2024
45 அடி உயர முனீஸ்வரருக்கு கும்பாபிஷேகம்

திருவொற்றியூர் அன்னை சிவகாமி நகர் பகுதியில் உள்ள பீலிக்கான் முனீஸ்வரர் அங்காளம்மன் கோயிலில் 45 அடி உயரத்தில் பிரமாண்ட முனீஸ்வரர் சிலைக்கு இன்று(மே 3) காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் மண்டல குழு தலைவர் தனியரசு, சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், பகுதி செயலாளர் அருள் தாசன், மாமன்ற உறுப்பினர்கள் தம்பையா சொக்கலிங்கம் உள்ளிட்ட 1,000க்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News August 24, 2025
சென்னையில் இன்று இரவு ரோந்து பணி விவரம்

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 24) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வரியாக உள்ளது. மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள கவலைகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
News August 24, 2025
சென்னை: புலனாய்வு துறையில் வேலை; ரூ.81,000 வரை சம்பளம்

மத்திய அரசின் புலனாய்வு துறையில் புலனாய்வு அதிகாரிக்கான காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பிரெஷர்ஸ் கூட தாராளமாக விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு B.sc முடித்திருந்தால் போதும். இதற்கு மாதம் ரூ. 25,500 – 81,100 வரை சம்பளம் வழங்கப்படும். 18-27 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள்<
News August 24, 2025
வேப்பேரியில் காதலன் கண்முன்னே காதலி தற்கொலை

வேப்பேரியைச் சேர்ந்த தர்ஷன் மற்றும் ஹர்ஷிதா ஆகியோருக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால், ஹர்ஷிதாவின் குணநலனில் சந்தேகம் இருப்பதாகக் கூறி தர்ஷன் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்தார். இதில் மனமுடைந்த ஹர்ஷிதா, தர்ஷனின் வீட்டிற்கு வந்து பேசி கொண்டிருந்தபோது, திடீரென 7வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து தர்ஷனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.