News January 4, 2026

தாடிக்கொம்பு அருகே கார் மரத்தில் மோதி ஒருவர் பலி!

image

தாடிக்கொம்பு, அழகுசமுத்திரபட்டி பிரிவு அருகே திண்டுக்கல்–கரூர் தேசிய நெடுஞ்சாலையில் திருப்பூரில் இருந்து மதுரை நோக்கி அதிவேகமாக சென்ற கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதி அப்பளம் போல் நொறுங்கியது. சம்பவத்தில் திருப்பூரை சேர்ந்த சேகர்(55) சம்பவ இடத்திலேயே பலியானார். டிரைவர் பாண்டித்துரை காயமடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Similar News

News January 13, 2026

திண்டுக்கல்: ஆதார் அட்டை வாங்க இனி ஒரு Hi போதும்!

image

திண்டுக்கல் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இது வேலை செய்யவில்லை என்றால்<> இங்கே கிளிக் <<>>செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 13, 2026

திண்டுக்கல் மக்களுக்கு கடும் எச்சரிக்கை!

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை ஆன்லைன் வாகன வாங்குபவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. OLX, க்விக்கர், கார்தேகோ போன்ற இணையதளங்களில் போலியான புகைப்படங்கள் & குறைந்த விலை விளம்பரங்களை வெளியிட்டு சிலர் மோசடியில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பணம் செலுத்துவதற்கு முன் ஆவணங்கள், விற்பனையாளர் விவரங்கள் & நேரில் சரிபார்த்த பின்னரே பரிவர்த்தனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News January 13, 2026

பழனி சென்ற பெண் பக்தர் பலி!

image

திருப்பூர் காந்தி நகரைச் சேர்ந்த சத்யா (57) என்பவர், பழனி முருகனைத் தரிசிக்கத் திருப்பூரில் இருந்து பாதயாத்திரையாகப் புறப்பட்டார். நேற்று திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி அருகே பழனி – தாராபுரம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதியது. இதில் சத்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கீரனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!