News January 4, 2026
சென்னை: பாலியல் தொழிலாளி அடித்துக்கொலை!

போரூர் தெள்ளியார் அகரம் பகுதியைச் சேர்ந்தவர் சில்பா (35). திருநங்கையான இவர், பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு பாலியல் தொழிலுக்காக வானகரம் சர்வீஸ் சாலையில் நின்ற போது, அங்கு வந்த சில மர்மநபர்கள், வானகரம் பகுதிக்கு அவரை அழைத்து சென்றனர். அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மர்மநபர்கள், சில்பாவை அடித்து கொன்றதாக தெரிகிறது. இதுகுறித்து வானகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News January 28, 2026
சென்னை: நடுரோட்டில் தீ பிடித்து எரிந்த கார்!

குரோம்பேட்டையைச் சேர்ந்த செல்வகுமார் (40) நேற்று இரவு வேலை முடித்து காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். பூந்தமல்லி- பெங்களூரு நெடுஞ்சாலையில், பாரிவாக்கம் சிக்னல் அருகே அவர் சென்ற காரின் முன் பகுதியில் புகை வந்துள்ளது. சில நொடிகளில் கார் குபுகுபுவென பயங்கரமாக தீ பிடித்து எரிந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். நல்வாய்ப்பாக செல்வகுமார் உயிர் தப்பினார்.
News January 28, 2026
சென்னை மெட்ரோ பயணிகள் கவனத்திற்கு

சென்னை மெட்ரோ ரயிலின் வாட்ஸ்அப் சாட்பாட் சேவையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு தற்போது சரிசெய்யப்பட்டுள்ளது. நேற்று மாலை செயல்படாமல் இருந்த இந்த சேவை, தற்போது வழக்கம்போல் இயங்குகிறது. பயணிகள் 8300086000 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் மெட்ரோ டிக்கெட்டுகளை மீண்டும் வாங்கலாம். ஏற்பட்ட அசௌகரியத்திற்கு சென்னை மெட்ரோ நிர்வாகம் வருத்தம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க