News January 4, 2026
தஞ்சாவூரில் திமுகவின் மூத்த நிர்வாகி உயிரிழப்பு!

தஞ்சாவூரை சேர்ந்த மொழிபோர் தளபதி என அழைக்கப்படும், திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினரும் முன்னாள் எம்.பியுமான எல்.கணேசன் இன்று அதிகாலை வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார். இதையடுத்து உயிரிழந்த திமுக மூத்த நிர்வாகிக்கு ஏராளமான திமுகவினர் அஞ்சலி செலுத்த உள்ளனர். மேலும் தஞ்சாவூரில் உள்ள அவரது வீட்டில் இன்று மாலை இறுதி சடங்குகள் நடைபெறும் எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News January 28, 2026
தஞ்சை: இன்று இங்கெல்லாம் மின்தடை!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அதிரமப்பட்டினம் துணை மின் நிலையத்தில், இன்று (ஜன.28) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின் விநியோகம் பெரும் அதிரமப்பட்டினம், ராஜாமடம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்விநியோகம் இருக்காது என துணை மின் பொறியாளர் தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க!

தஞ்சை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் எதிர்வரும் 29ந் தேதி அன்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.