News May 3, 2024
நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு

நீலகிரியில் அடுத்த 4 நாட்களுக்கு (மே.6) இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், நீலகிரி மாவட்டத்தில் மே.7ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீலகிரியில் இதுவரை இல்லாத அளவு உட்சபட்ட வெப்ப அலையின் தாக்கம் இருந்து வந்த நிலையில் இச்செய்தி வெளியாகியுள்ளது.
Similar News
News January 1, 2026
நீலகிரி: அவசர காலத்தில் உதவும் எண்.. SAVE பண்ணுங்க

நீலகிரி மாவட்டத்தில் சிறுத்தை, கரடி, யானைகள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகாளல் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மேலும், இவற்றால் அவ்வப்போது உயிர் பலியும் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், நீலகிரி வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட அவசர உதவி எண் தான் 1800 425 4343. இதில் வனவிலங்குகளின் நடமாட்டம், விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து புகார் அளிக்கலாம். (SHARE)
News January 1, 2026
நீலகிரி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

நீலகிரி மலை ரயில் அதிகாரிகள் தெரிவிக்கையில் விடுமுறைகளை முன்னிட்டு ஜனவரி மாதம் 2, 4, 15, 17, 23, 25 ஆகிய தேதிகளிலும் சிறப்பு மலை ரயில் இயக்கப்படுகிறது.இந்த சிறப்பு மலை ரயில் காலை 9.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு மதியம் 2.25 மணிக்கு ஊட்டி வந்து சேரும். அதேபோல் அடுத்த நாள் ஊட்டியில் இருந்து காலை 11.25 மணிக்கு புறப்பட்டு, மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையத்தை ரயில் சென்றடையும்.
News January 1, 2026
நீலகிரி: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றனுமா?

உங்களது இடம் (அ) வீடு கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற இங்கு<
1.கூட்டு பட்டா,
2.விற்பனை சான்றிதழ்,
3.நில வரைபடம்,
4.சொத்து வரி ரசீது,
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். (SHARE)


