News May 3, 2024
கோவை: காவல்துறையினருக்கு யோகா பயிற்சி

கோவை மாநகர காவல்துறையில் பணியாற்றி வரும் காவலர்களின் உடல் நலனையும், மனநலனையும் மேம்படுத்தும் நோக்கில் தொடர்ந்து 48 நாட்கள் ஒரு பயிற்சியை மேற்கொள்ளும் பொழுது அது அவர்களுக்கு ஒரு பழக்கமாக மாறிவிடும் என்று கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் அறிவுரை வழங்கினார். அதன்படி 48 நாட்களுக்கு கோவை மாநகர் காவலர்களுக்கான 2 கிலோமீட்டர் ஓட்டம் மற்றும் 10 நிமிடம் தியானம் ஆகியவற்றை இன்று முதல் தொடங்கியது.
Similar News
News August 22, 2025
3 லட்சம் பேருக்கு புற்றுநோய் பரிசோதனை.!

கோவை மாவட்டத்தில் சுகாதாரத்துறை சார்பில் நடைபெற்ற புற்றுநோய் பரிசோதனை முகாமில் 3,20,527 பேர் பரிசோதிக்கப்பட்டனர். இதில் 1,950 பேருக்கு புற்றுநோய் அறிகுறி கண்டறியப்பட்டு, 47 பேருக்கு புற்றுநோய் உறுதி செய்யப்பட்டது. வாய், மார்பகம், கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோய் உள்ளிட்ட பிரிவுகளில் பரிசோதனை நடைபெற்றது. குணமடையாத வாய்ப்புண், மார்பகத்தில் வலியற்ற கட்டி, போன்றவை தெரிய வந்தன.
News August 22, 2025
கோவை மக்களே உஷார்… இந்த நாட்களில் மழை பெய்யுமாம்.!

கோவையில் இன்று முதல் ஆகஸ்ட் 24 வரை வானம் மேகமூட்டமாக இருக்கும். அடுத்த ஐந்து நாட்களுக்கு லேசான தூறல் மழை ஏற்படும். அதிகபட்ச வெப்பம் 31-32°C, குறைந்தபட்சம் 22-23°C. காலை ஈரப்பதம் 80-90%, மாலை 50-60%. காற்று மணிக்கு 10-18 கி.மீ வேகத்தில் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது என தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 22, 2025
கோவையில் செப்டம்பா் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம்

கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீதிமன்ற வளாகங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்)செப்டம்பா் 13ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், ஏற்கெனவே நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள், சமரசம் செய்யக்கூடிய குற்றவியல் வழக்குகள், காசோலை தொடா்பான வழக்குகள், வங்கிக் கடன், கல்விக் கடன் தொடா்பான வழக்குகளுக்கு சமரச தீா்வு காணப்படும் .