News May 3, 2024

புழல் பகுதியில் நாளை மின்தடை

image

புழல் துணை மின் நிலையத்தில் உயரழுத்த மின் மாற்றியினை இயக்கத்திற்கு கொண்டு வர தேவையான பணி நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாளை(மே 3) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை புழல் முழுவதும், சூரப்பட்டு முழுவதும், விநாயகபுரத்தில் ஒரு சில பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும். மதியம் 2 மணிக்கு மேல் பணிகள் முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

Similar News

News February 17, 2026

சென்னை: வெள்ளத் தடுப்பிற்கு 62% நிதி!

image

சென்னை மாநகராட்சி 2025–26 ஆண்டிற்கான முதல் காலநிலை பட்ஜெட்டாக ரூ.1,341.2 கோடி ஒதுக்கியுள்ளது. இதில் 62%க்கும் மேற்பட்ட நிதி வெள்ளத் தடுப்பு மற்றும் நீர் மேலாண்மை பணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும், 240 கி.மீ. மழைநீர் வடிகால் அமைத்தல், நீர்நிலைகள் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் இன்றைய(பிப்.17) பட்ஜெட் தாக்குதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 17, 2026

சென்னையில் 9 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்!

image

சென்னையில் 9 இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து கமிஷனர் அருண் நேற்றிரவு(பிப்.16) உத்தரவிட்டார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த ராஜா, தரமணி சட்டம்- ஒழுங்கு பிரிவுக்கும், நீலகண்டன், மெரினா சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். யமுனா, கொளத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டார். பார்த்தசாரதி அடையாறுக்கு, அன்புமணி முத்தயால்பேட்டைக்கு மாற்றப்பட்டனர்.

News February 17, 2026

சென்னை: VOTER ID தொலஞ்சிருச்சா..? CLICK NOW

image

சென்னை மக்களே, 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த சமயத்தில், உங்க VOTER ID தொலைந்து போயிடுச்சா? இல்லை மோசமாகவும், பழசாகவும் இருக்கா? கவலை வேண்டாம். <>இங்கே <<>>கிளிக் செய்து உங்க VOTER ID எண்ணை உள்ளீடு செய்யவும். பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே டவுன்லோடு செய்யலாம். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!