News May 3, 2024
ரயிலில் அபாயச் சங்கிலி எப்படி செயல்படுகிறது?

ரயிலில் பயணிக்கும் பெரும்பாலானவர்களுக்கு அபாயச் சங்கிலி குறித்து தெரிந்திருக்கும். இதைப் பிடித்து இழுத்தால், ரயில் ஓட்டுநருக்கு சிக்னல் கிடைத்து அவர் ரயிலை நிறுத்துவார் என நினைப்போம். ஆனால், அது முற்றிலும் தவறு. ரயில் பெட்டிகளில் உள்ள அபாயச் சங்கிலிகள் பிரேக் பிரஷர் உடன் நேரடியாக இணைக்கப்பட்டிருக்கும். அதைப் பிடித்து இழுக்கும்போது, பிரஷர் ரிலீஸாகி வேகம் வெகுவாகக் குறைந்து ரயில் தானாக நிற்கும்
Similar News
News February 4, 2026
₹18,000 சம்பளம்.. 22,000 காலிபணியிடங்கள்

இந்திய ரயில்வேயில் காலியாகவுள்ள 22,000 குரூப் ‘டி’ பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: 10th/ ITI. வயது வரம்பு: 18 – 33. தேர்வு முறை: கணினி வழி, உடற்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ சோதனை. சம்பளம்: ₹18,000 முதல். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் பிப்.20 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு இங்கே <
News February 4, 2026
T20 WC: இன்று இந்தியா Vs தென்னாப்பிரிக்கா

டி20 உலகக் கோப்பை தொடருக்கு, முன்னோட்டமாக இன்று நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை இந்தியா எதிர்கொள்கிறது. இப்போட்டியிலும் சஞ்சு சாம்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறினால், பிரதான ஆட்டங்களில் அவருக்கு பிளேயிங் 11-ல் இடம் கிடைக்காது. திலக் வர்மா அணிக்கு திரும்பியுள்ளதால், டீம் காம்பினேஷனில் சில மாற்றங்கள் செய்யப்படலாம். நவி மும்பையில் இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
News February 4, 2026
₹6,000 ஆக உயர்த்தி அறிவித்தது தமிழக அரசு.. HAPPY

தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பணியாற்றும் தூய்மை காவலர்களுக்கான மதிப்பூதியத்தை ₹5,000-லிருந்து ₹6,000 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. அத்துடன், இதற்காக ₹417 கோடி கூடுதல் நிதியை ஒதுக்கியும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக, ஊராட்சிகளில் பணிபுரியும் பகுதிநேர மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு தொகுப்பூதியத்தை ₹5,000 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவித்திருந்தது.


