News May 3, 2024
7030 புதிய பேருந்துகள் வாங்க அரசு முடிவு

இந்த ஆண்டு 7030 புதிய பேருந்துகள் வாங்கப்பட இருப்பதாக தமிழக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தாண்டில் மட்டும் 15 ஆண்டுகள் நிறைவடைந்த 652 பேருந்துகள் கழிக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த சில நாட்களாக பேருந்தின் கதவு, படிக்கட்டுகள் கழன்று விபத்து நேர்ந்ததை அடுத்து எதிர்க்கட்சித் தலைவர்கள், போக்குவரத்து கழகத்தை கடுமையாக விமர்சித்திருந்தனர்.
Similar News
News August 30, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஆகஸ்ட் 30) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News August 30, 2025
செப்டம்பர் 1 முதல் மிகப்பெரிய மாற்றங்கள்

*சமையல் சிலிண்டர் விலை குறைய வாய்ப்புள்ளது. *வெள்ளியின் தரத்தை உறுதி செய்ய ஹால்மார்க் முத்திரை பதிப்பு. *செப் 1 முதல் எந்த தபாலும் Speed Post-ல் நேரடியாக அனுப்பப்படும். *சமீபமாக விலை மாற்றமில்லாத CNG, PNG கேஸ் விலை மாற்றப்படலாம். *TRAI உத்தரவுபடி மோசடி அழைப்பு, குறுஞ்செய்தியை தடுக்க Block Chain System அமல். *SBI வழிகாட்டுதலின்படி சில கிரெடிட் அட்டைகளில் ரிவார்டு பாயிண்ட்ஸ் நிறுத்தப்படலாம்.
News August 30, 2025
திமுக அலட்சிய மாடல் அரசு: நயினார் நாகேந்திரன் சாடல்

உங்களுடன் ஸ்டாலின் குறைதீர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட <<17552132>>மனுக்கள் <<>>ஆற்றில் வீசப்பட்டதற்கு நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குறைகளைச் சுட்டிக்காட்டி அளிக்கப்படும் மனுக்களை ஆற்றில் வீசியெறிவதும் தான் திராவிட மாடலின் குறைதீர்ப்பு லட்சணமா? என கேள்வி எழுப்பியுள்ளார். மக்களை அலைக்கழித்து அவமதிக்கும் திமுக அரசின் அலட்சியப் போக்கே அதன் அழிவுக்கு அடித்தளமிடும் எனவும் கூறியுள்ளார்.